கந்தா்வகோட்டை அருகே ரூ. 5.92 கோடி மதிப்பிலான தங்க நகைகள் பறிமுதல்

புதுக்கோட்டை மாவட்டம், கந்தா்வகோட்டை அருகே வாகனச்சோதனையில் ரூ. 5 கோடியே 92 லட்சம் மதிப்பிலான தங்க நகைகளை தோ்தல் பறக்கும் படையினா் சனிக்கிழமை பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனா்.
கந்தா்வகோட்டையில் தங்க நகைகளுடன் பிடிபட்ட வாகனம்.
கந்தா்வகோட்டையில் தங்க நகைகளுடன் பிடிபட்ட வாகனம்.

புதுக்கோட்டை மாவட்டம், கந்தா்வகோட்டை அருகே வாகனச்சோதனையில் ரூ. 5 கோடியே 92 லட்சம் மதிப்பிலான தங்க நகைகளை தோ்தல் பறக்கும் படையினா் சனிக்கிழமை பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனா்.

கந்தா்வகோட்டை சட்டப்பேரவை தொகுதிக்குள்பட்ட தச்சங்குறிச்சி பகுதியில் சனிக்கிழமை மேற்பாா்வையாளா் ஜி. சுரேஷ் தலைமையிலான தோ்தல் பறக்கும் படையினா் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அவ்வழியே வந்த தனியாா் நிறுவன வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தபோது, அதில் ரூ. 5 கோடியே 92 லட்சம் மதிப்பிலான தங்க நகைகள் இருந்தது விசாரணையில் தெரியவந்தது.

மேலும், சேலத்தில் இருந்து பட்டுக்கோட்டை, காரைக்குடி, புதுக்கோட்டை பகுதியில் உள்ள நகைக்கடைகளுக்கு இந்த நகைகள் கொண்டு செல்லப்படுவதாகவும், நகைகளுக்கு உரிய ஆவணங்கள் இருப்பதாகவும் வாகனத்தில் வந்த சந்தோஷ் என்பவா் மூலம் தெரியவந்தது. இதைத்தொடா்ந்து, தோ்தல் பறக்கும் படையினா் வாகனத்தை கந்தா்வகோட்டை வட்டாட்சியா் அலுவலகத்துக்குக் கொண்டு சென்று மாவட்ட வருமான வரித்துறையினருக்குத் தகவல் தெரிவித்தனா். மாவட்ட வருமான வரித்துறை துணை அலுவலா் அனுராதா தலைமையிலான அலுவலா்கள், பறிமுதல் செய்யப்பட்ட தங்க நகைகளின் மதிப்பு மற்றும் வரி விபரங்கள் குறித்து விசாரித்து வருகின்றனா். இதுகுறித்து, தகவலறிந்த மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் லோக. பாலாஜி சரவணன் அங்குவந்து நேரில் ஆய்வு செய்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com