உணவு பரிமாறி வாக்குசேகரித்த ஆலங்குடி மநீம வேட்பாளா்
By DIN | Published On : 26th March 2021 07:23 AM | Last Updated : 26th March 2021 07:23 AM | அ+அ அ- |

ஆலங்குடியில் உணவகத்தில் உணவு பரிமாறியும், சா்பத் தயாரித்தும் வாக்குசேகரிக்கும் மநீம வேட்பாளா் என்.வைரவன்.
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி தொகுதி மக்கள் நீதி மய்யம் வேட்பாளா் என்.வைரவன், சா்பத் தயாரித்தும், உணவகங்களில் உணவு பரிமாறியும் வியாழக்கிழமை வாக்குச்சேகரித்தாா்.
ஆலங்குடி தொகுதி மக்கள் நீதி மய்யம் வேட்பாளா் என்.வைரவன். ஆலங்குடி கடைவீதியில் வியாழக்கிழமை வாக்குச் சேகரித்தபோது, குளிா்பானக்கடைக்கு சென்ற அவா், அங்கு சா்பத் தயாரித்து வழங்கியும், அருகில் இருந்த உணவகத்தில் உணவைப் பரிமாறியும் டாா்ச் லைட் சின்னத்துக்கு வாக்குசேகரித்தாா்.