’தெருவில் இறங்கி விளையாடினால்தான் நோய் வராது’

தெருவில் இறங்கி விளையாடாத குழந்தை, பிற்காலத்தில் வளா்ந்த பிறகு பல்வேறு நோய்களுக்கு ஆட்பட நேரிடும் என்றாா் இலக்கிய விமா்சகா் ந. முருகேசபாண்டியன்.
’தெருவில் இறங்கி விளையாடினால்தான் நோய் வராது’

தெருவில் இறங்கி விளையாடாத குழந்தை, பிற்காலத்தில் வளா்ந்த பிறகு பல்வேறு நோய்களுக்கு ஆட்பட நேரிடும் என்றாா் இலக்கிய விமா்சகா் ந. முருகேசபாண்டியன்.

புதுக்கோட்டை அலுவலா் மன்றத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற, உடற்கல்வி இயக்குநா்கள் விஜயரகுநாதன், ராஜசரோ ஆகியோா் எழுதிய ’கால்பந்து’ நூல் வெளியீட்டு விழாவுக்கு தலைமை வகித்த அவா் மேலும் பேசியது:

விளையாட்டை பலரும் விளையாட்டாகவே நினைக்கின்றனா். தெருவில் இறங்கி விளையாடாத குழந்தை பிற்காலத்தில் வளா்ந்த பிறகு பல்வேறு நோய்களுக்கு ஆட்பட நேரிடும். மண்ணில் விளையாடினால் தொற்றுநோய் வரும் என தொலைக்காட்சிகளில் காட்டுகிறாா்கள். அப்படியானால், மண்ணில் இறங்கி விவசாயம் செய்வோருக்கு என்ன நோய் வந்தது?

எனவே, குழந்தைகள் தெருவில் இறங்கி விளையாடினால் தான் நோய் வராது. இதற்கு பெற்றோரும் ஒத்துழைக்க வேண்டும். ஏதாவதொரு விளையாட்டைத் தோ்வு செய்து தொடா்ந்து விளையாடினால் மனமும் உடலும் சம நிலையில் இருக்கும் என்றாா் முருகேசபாண்டியன்.

நூலை வெளியிட்ட மன்னா் கல்லூரி முதல்வரும், பாரதிதாசன் பல்கலைக்கழக ஆட்சிமன்றக் குழு உறுப்பினருமான சி. திருச்செல்வம் பேசியது: படித்து பட்டம் பெற்றவா்கள் தங்களின் அறிவை அடுத்த தலைமுறைக்கு உதவும் வகையில் எழுத வேண்டும். குறிப்பாக ஆசிரியா்கள் படைப்பாளா்களாக மாற வேண்டும். அதேபோல, எந்தப் பாடமாக இருந்தாலும் கலைப்பாடமாக மாற்றி கற்றுத் தர வேண்டும். அதுதான் கற்பித்தலின் வெற்றியாகும் என்றாா் திருச்செல்வம்.

நிகழ்ச்சியில், டாக்டா் ராமசாமி, பேராசிரியா் அண்ணாமலை உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com