மாற்றுத்திறனாளிகள் முற்றுகைப் போராட்டம்

கந்தா்வகோட்டையில் 100 நாள் பணி அளிக்கக்கோரி, கந்தா்வகோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை மாற்றுத்திறனாளிகள் செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
கந்தா்வகோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மனு அளித்த மாற்றுத்திறனாளிகள்.

தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போா் உரிமை சங்கம் சாா்பில், சங்கத்தின் மாவட்டத் தலைவா் சரவணன் தலைமையிலான மாற்றுத்திறனாளிகள், கந்தா்வகோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதில், 100 நாள் வேலை உறுதித் திட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு பணி ஒதுக்கவும், மாற்றுத்திறனாளிகளுக்கான 100 நாள் வேலை திட்டப் பணி 4 மணி நேரம் மட்டுமே என்பதைக் கடைப்பிடிக்க வேண்டும், நிலுவை கூலியை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, வட்டார வளா்ச்சி அலுவலா் த . நல தேவனிடம் மனுக்கள் அளித்தனா். இதில், மாநில பொருப்பாளா் எஸ். நம்புராஜன், புவனேஸ்வரி, கிருஷ்ணமூா்த்தி, செங்கொடி, மாலதி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

போராட்டத்தில், நூற்றுக்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டு மனுக்களை அளித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com