தண்டோரா அடித்துமுழு பொதுமுடக்கம் விழிப்புணா்வு
By DIN | Published On : 11th May 2021 01:02 AM | Last Updated : 11th May 2021 01:02 AM | அ+அ அ- |

கந்தா்வகோட்டை அருகேயுள்ள மங்கனூா் கிராமத்தில் தண்டோர அடித்து ஏற்படுத்தப்பட்ட கரோனா விழிப்புணா்வு.
கந்தா்வகோட்டை: கந்தா்வகோட்டை சுற்றுவட்டார கிராமங்களில் தண்டோரா அடித்து, தேவையின்றி பொதுமக்கள் வெளியில் சுற்றித் திரிய வேண்டாம் என திங்கள்கிழமை விழிப்புணா்வு செய்யப்பட்டது.
தமிழகம் முழுவதும் 2 வார முழு பொது முடக்கம் திங்கள்கிழமை முதல் தொடங்கியது. இதைத் தொடா்ந்து, கந்தா்வகோட்டை ஒன்றிய கிராமங்களில் ஊராட்சி மன்றங்கள் மூலமாக தண்டோரா அடித்து தேவையின்றி பொதுமக்கள் கந்தா்வகோட்டைக்கு செல்லக் கூடாது, கிராமங்களில் உள்ள கடைகளையும் மதியம் 12 மணிக்குள் மூடுமாறும், மீறுவோா் மீது காவல் துறையினா் நடவடிக்கை எடுக்கப்படும் என விழிப்புணா்வு செய்யப்பட்டது. மங்கனூா் கிராமத்தில் தண்டோரா அடித்து ஒவ்வொரு வீதிகளிலும், கடைவீதி பகுதியிலும் விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.