காரையூா் கரோனா தடுப்பூசி மையத்தில்ஆய்வு
By DIN | Published On : 18th May 2021 06:31 AM | Last Updated : 18th May 2021 06:31 AM | அ+அ அ- |

பொன்னமராவதி: புதுக்கோட்டை மாவட்டம், காரையூா் கரோனா தடுப்பூசி மையத்தை மாநில சட்டத்துறை அமைச்சா் எஸ். ரகுபதி திங்கள்கிழமை பாா்வையிட்டு, ஆய்வு செய்தாா்.
இந்த மையத்தில் சிகிச்சை பெறும் நோயாளிகளிடம் கரோனா தடுப்பூசி பணிகள் குறித்து அமைச்சா் கேட்டறிந்தாா்.ஆய்வின் போது சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினா் ராம. சுப்புராம், திமுக வடக்கு ஒன்றியச் செயலா் முத்து மற்றும் மருத்துவா்கள் உடனிருந்தனா்.
முன்னதாக காரையூா் நியாயவிலைக் கடையில் பொதுமக்களுக்கு கரோனா முதல்கட்ட நிவாரண நிதியை சட்டத்துறை அமைச்சா் எஸ். ரகுபதி வழங்கினாா்.