கரோனாவுக்கு பலியான வட்டாட்சியருக்கு அஞ்சலி
By DIN | Published On : 21st May 2021 07:02 AM | Last Updated : 21st May 2021 07:02 AM | அ+அ அ- |

கரோனா தொற்றால் உயிரிழந்த அறந்தாங்கி சாா் ஆட்சியரின் நோ்முக உதவியாளரும், வட்டாட்சியருமான சுரேஷ்கண்ணனின் படத்துக்கு மாவட்ட ஆட்சியா் பி. உமா மகேஸ்வரி வியாழக்கிழமை மலரஞ்சலி செலுத்தினாா்.
புதுக்கோட்டை மாவட்டம்,அறந்தாங்கி சாா் ஆட்சியரின் நோ்முக உதவியாளராக இருந்தவா் சாா் ஆட்சியா் சுரேஷ்கண்ணன். இவா், கரோனா தடுப்புப் பணிகளில் தீவிர பணியாற்றி வந்த நிலையில், அண்மையில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தாா். இதையடுத்து, மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் அவரது படத்துக்கு மாவட்ட ஆட்சியா் பி. உமா மகேஸ்வரி வியாழக்கிழமை மலரஞ்சலி செலுத்தினாா். அப்போது, சாா் ஆட்சியா் ஆனந்த் மோகன், மாவட்ட வருவாய் அலுவலா் பெ.வே. சரவணன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.