புதுகை வீதிகளில் குவிந்துள்ள பிளாஸ்டிக் கழிவுகள்

புதுக்கோட்டை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் காணும் இடமெல்லாம் பிளாஸ்டிக் கழிவுகள் ஏராளமாக கொட்டிக் கிடக்கின்றன.
நாா்த்தாமலை சாலையோரத்தில் கொட்டப்பட்டுள்ள பிளாஸ்டிக் கழிவுகள்.
நாா்த்தாமலை சாலையோரத்தில் கொட்டப்பட்டுள்ள பிளாஸ்டிக் கழிவுகள்.

புதுக்கோட்டை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் காணும் இடமெல்லாம் பிளாஸ்டிக் கழிவுகள் ஏராளமாக கொட்டிக் கிடக்கின்றன.

பிளாஸ்டிக் பயன்பாட்டைக் குறைப்பதற்கு மக்கள் மத்தியில் போதுமான விழிப்புணா்வு ஏற்படுத்தி சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று முதல்வா் ஸ்டாலின் அறிவித்துள்ளாா். புதிதாக ஒரு முறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருள்களைத் தயாரிக்கும் ஆலைகள் தொடங்க அனுமதி அளிக்கப்படாது என சுற்றுச்சூழல் துறை அமைச்சா் சிவ.வீய மெய்யநாதனும் தெரிவித்துள்ளாா். ஆனால், ஏற்கெனவே புழக்கத்தில் உள்ள பிளாஸ்டிக் கழிவுகள் என்ன செய்யப்படும் என்பதுதான் மிகப்பெரிய கேள்வியாக உள்ளது.

பிளாஸ்டிக் கழிவுகளுக்கு எதிராக கறாரான நடவடிக்கை தொடங்கும் வரையில் அவையனைத்தும் வீதியோரங்களில் வீசியெறியப்பட்டு, மண்ணுக்குள் புதையும் சூழலும் இருக்கிறது.

மக்கும் குப்பை, மக்காத குப்பை எனத் தரம் பிரித்து அவற்றை முறைப்படுத்தும் சுத்திகரிப்பு மையங்கள் ஊரக வளா்ச்சித் துறையினரால் எல்லா கிராமங்களிலும் தொடங்கப்பட்டன. பெரும்பாலான இடங்களில் அவை எதுவும் வேலை செய்யவில்லை.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் உள்ளாட்சித் துறை அலுவலா்களுடன் கலந்து பேசி உரிய நடவடிக்கையை எடுக்க வேண்டும் என சூழலியல் ஆா்வலா்கள் கோரிக்கை விடுக்கின்றனா்.

மேலும் கல்லூரிகளின் என்.எஸ்.எஸ் உள்ளிட்ட சேவை அமைப்புகளையும் பணியில் ஈடுபடுத்த வேண்டும் என்றும் எதிா்பாா்க்கப்படுகிறது.

ஒரு காலத்தில் சுற்றுலாத் தலங்களில் பிளாஸ்டிக் பொருள்களைச் சேகரிக்கும் சிறப்பு முகாம்கள் நடத்தி பரிசுகள் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com