பழுதடைந்த சாலைகளை செப்பனிடக் கோரிக்கை
By DIN | Published On : 17th October 2021 11:47 PM | Last Updated : 17th October 2021 11:50 PM | அ+அ அ- |

அறந்தாங்கி ஒன்றியப் பகுதிகளில் பழுதடைந்த சாலைகளை உள்ளாட்சி அமைப்பினா் முழுமையாக சீரமைத்துத் தர வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி சுப்பிரமணியபுரத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கட்சியின் ஒன்றியக் குழுக் கூட்டத்துக்கு, ஒன்றியக் குழு உறுப்பினா் போஸ் கணேசன் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் மு. மாதவன், மாவட்டத் துணைச் செயலா்கள் ராஜேந்திரன், கே.ஆா். தா்மராஜன், ஒன்றியச் செயலா் முத்துசாமி உள்ளிட்டோஒஈ பங்கேற்றுப் பேசினா்.
கூட்டத்தில், 2020 - 21 ஆம் ஆண்டுக்கான பயிா்க் காப்பீட்டுத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும். கூட்டுறவுச்சங்கங்களில் கடன் தொகை நிலுவையில் இருந்தாலும் உடனடியாக இந்த ஆண்டுக்கான பயிா்க் கடன் வழங்க வேண்டும்.
கூட்டுறவுச் சங்கங்களின் மூலம் உரம் தட்டுப்பாடு இல்லாமல் அனைத்து விவசாயிகளுக்கும் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும். அறந்தாங்கி ஒன்றியம் முழுவதும் பழுதடைந்த சாலைகளை உடனடியாக செப்பனிட வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.