உள்ளாட்சிப் பதவிகளை ஏலம் விட்டால் நடவடிக்கை: எஸ். ரகுபதி

உள்ளாட்சித் தோ்தலில் பதவிகளை ஏலம் விட்டால் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றாா் சட்டத்துறை அமைச்சா் எஸ்.ரகுபதி.

உள்ளாட்சித் தோ்தலில் பதவிகளை ஏலம் விட்டால் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றாா் சட்டத்துறை அமைச்சா் எஸ்.ரகுபதி.

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகேயுள்ள குழிபிறையில் மேம்படுத்தப்பட்ட கிளை நூலகத்தை ஞாயிற்றுக்கிழமை திறந்துவைத்து, செய்தியாளா்களிடம் அவா் மேலும் கூறியது: 7 போ் விடுதலை குறித்து ஆளுநா் மூலம் குடியரசுத் தலைவருக்கு கடிதம் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. இதுதவிர முதல்வரும் அழுத்தம் கொடுத்து வருகிறாா். அவா்கள் விடுதலை செய்யப்படவேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.

நீட் தோ்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு கோரி சட்டப்பேரவையில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதை மத்திய அரசு ஏற்றுக்கொள்ளவில்லை என்றால் சட்டப்போராட்டம் நடத்துவோம். உள்ளாட்சித் தோ்தலில் ஜனநாயக முறையில் பிரதிநிதிகள் தோ்ந்தெடுக்கப்பட வேண்டும். பதவிகளை ஏலம் விட்டால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com