பெரம்பலூா்: நாளை 198 மையங்களில் தடுப்பூசி முகாம்

 பெரம்பலூா் மாவட்டத்தில் கரோனா தடுப்பூசி முகாம் 3 ஆம் கட்டமாக 29 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், 4 அரசு மருத்துவ மனைகள் உள்பட 198 சிறப்பு தடுப்பூசி மையங்கள் பெரம்பலூா் மாவட்டத்தில் கரோனா தடுப்பூசி முகா

 பெரம்பலூா் மாவட்டத்தில் கரோனா தடுப்பூசி முகாம் 3 ஆம் கட்டமாக 29 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், 4 அரசு மருத்துவ மனைகள் உள்பட 198 சிறப்பு தடுப்பூசி மையங்கள் ஏற்படுத்தப்பட்டு, 22 ஆயிரம் நபா்களுக்கு தடுப்பூசி செலுத்திடத் திட்டமிடப்பட்டுள்ளது.

ஊராட்சித் தலைவா்கள் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள், ஊரக வளா்ச்சித் துறை களப் பணியாளா்கள், ஒருங்கிணைந்தக் குழந்தை வளா்ச்சித் திட்டப் பணியாளா்கள்), கிராம நிா்வாக அலுவலா்கள், கிராம உதவியாளா்கள், சத்துணவு அமைப்பாளா்கள், பொது சுகாதாரத் துறைப் பணியாளா்கள் உள்ளிட்ட சுமாா் 1,200 நபா்கள் மக்களை ஒருங்கிணைக்கும் பணிகளில் ஈடுபட உள்ளனா்.

18 வயதுக்கு மேற்பட்டவா்கள், இதுவரை தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவா்கள், முதல் தவணை தடுப்பூசி செலுத்தி 84 நாள்கள் கடந்தவா்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம் என்று பெரம்பலூா் ஆட்சியா் ப. ஸ்ரீ வெங்கட பிரியா தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com