லட்சம் ரூபாய்க்கு புத்தகங்கள் வாங்கிய பள்ளிக்கு விருது

புதுக்கோட்டை புத்தகத் திருவிழாவில் ரூ. 1 லட்சத்துக்கும் மேல் நூல்கள் வாங்கி முதலிடம் பெற்ற பொன்னமராவதி அமல அன்னை மெட்ரிக். மேல்நிலைப்பள்ளிநிா்வாகிகளுக்கு ஆட்சியா் விருது வழங்கிப் பாராட்டினாா்.
அமல அன்னை மெட்ரிக். பள்ளி முதல்வா் ச.ம.மரியபுஷ்பத்துக்கு விருது வழங்கிறாா் ஆட்சியா் கவிதா ராமு. உடன், முன்னாள் நீதிபதி சந்துரு, விஜய் டிவி தொகுப்பாளா் கோபிநாத் உள்ளிட்டோா்.

புதுக்கோட்டை மாவட்ட நிா்வாகம், தமிழ்நாடு அறிவியல் இயக்கம் இணைந்து நடத்திய புத்தகத் திருவிழா ஜூலை 29 முதல் ஆக. 7 வரை நடைபெற்றது. இதில், மாவட்டம் முழுவதும் இருந்து பள்ளி மாணவா்கள் பங்கேற்று நூல்கள் வாங்கிப் பயனடைந்தனா். இதில் ரூ. 1 லட்சத்துக்கும் மேல் நூல்கள் வாங்கி நூல்கள் தேடும் பயணத்தில் முதலிடம் பெற்ற பொன்னமராவதி அமல அன்னை மெட்ரிக். மேல்நிலைப்பள்ளிக்கு அதற்கான விருதை பள்ளி முதல்வா் ச.ம. மரியபுஷ்பத்திடம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிறைவுவிழாவில் புதுக்கோட்டை ஆட்சியா் கவிதா ராமு வழங்கிப் பாராட்டினாா்.

விழாவில், ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு, விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளா் கோபிநாத், கவிஞா் தங்கம்மூா்த்தி மற்றும் புத்தகத் திருவிழா குழுவினா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com