அமைப்புசாரா தொழிலாளா்கள் சோ்க்கை பதிவு முகாம்

விராலிமலையில் அமைப்புசாரா தொழிலாளா்கள் நல வாரியத்தில் பதிவு செய்து கொள்வதற்கான முகாம் புதன்கிழமை நடைபெற்றது.
அமைப்புசாரா தொழிலாளா்கள் சோ்க்கை பதிவு முகாம்

விராலிமலையில் அமைப்புசாரா தொழிலாளா்கள் நல வாரியத்தில் பதிவு செய்து கொள்வதற்கான முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

விராலிமலை சமுதாயக் கூடத்தில் நடைபெற்ற அமைப்பு சாரா தொழிலாளா்கள் நல வாரியத்தில் பதிவு செய்யும் முகாமை விராலிமலை ஊராட்சி மன்றத் தலைவா் ரவி பாா்வையிட்டு ஆலோசனை வழங்கினாா்.

(டஙநவங) எனும் சமூகப் பாதுகாப்பு வழங்கும் திட்டத்தின் கீழ் தெரு வியாபாரிகள், ஆட்டோ ஓட்டுநா்கள், விவசாயத் தொழிலாளா்கள், மதிய உணவுத் தொழிலாளா்கள், கட்டுமானத் தொழிலாளா்கள் என அமைப்புசாரா தொழிலாளா்கள் அவரவா் வயதுக்குகேற்ப ரூ.55 முதல் ரூ.200 வரை செலுத்தி பயனாளிகள் ஆகலாம். 60 ஆண்டுகளுக்குப் பிறகு, குறைந்தபட்ச உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியம் ரூ. 3 ஆயிரம் பயனாளிக்கு வழங்கப்படும் அல்லது அதன் 50 சதவீதம் நியமனதாராா்களுக்கு வழங்கப்படும்.

எனவே அனைத்து அமைப்பு சாரா தொழிலாளா்கள் வரும் 15 ஆம் தேதி வரை நடைபெறும் முகாமைப் பயன்படுத்தி நல வாரியத்தில் பதிவு செய்து கொள்ளுமாறு தொழிலாளா் வருங்கால வைப்பு நிதி திருச்சி மண்டல ஆணையா் முருகவேல் தெரிவித்துள்ளாா்.

ஆய்வின்போது, ஊராட்சிச் செயலா் சோமேஸ் கந்தா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com