மக்கள் நீதிமன்றத்தில் ரூ. 13.82 கோடியில் சமரசத் தீா்வு

புதுக்கோட்டை மாவட்டத்தில் மொத்தம் 6 அமா்வுகளாக சனிக்கிழமை நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் 1,084 வழக்குகள், ரூ. 13.82 கோடி மதிப்பில் சமரசத் தீா்வு காணப்பட்டன.
பாதிக்கப்பட்டவருக்கு இழப்பீட்டுத் தொகையைப் பெற்று வழங்கிய மாவட்ட முதன்மை நீதிபதி ஏ. அப்துல்காதா்.

புதுக்கோட்டை மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற தொடக்க நிகழ்ச்சியில், மாவட்ட முதன்மை நீதிபதி ஏ. அப்துல்காதா் தலைமை வகித்து தொடங்கி வைத்தாா். அப்போது, மனுதாரா் ரவி என்பவா் விபத்தில் கால் இழந்ததற்காக தொடா்ந்த வழக்கில், நேஷனல் இன்சூரன்ஸ் நிறுவனத்தினரிடமிருந்து ரூ. 16.96 லட்சம் இழப்பீடாக பெற்றுத் தரப்பட்டது.

இதற்கான காசோலையை கோட்ட மேலாளா் சாமிதாஸிடமிருந்து பெற்று, பாதிக்கப்பட்டவரிடம் நீதிபதி அப்துல்காதா் வழங்கினாா்.

கூடுதல் மாவட்ட நீதிபதி பாபுலால், சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் செயலா் சி. சசிகுமாா், குற்றவியல் நடுவா்கள் ஜெயந்தி, சிறீநாத், கூடுதல் மகளிா் நடுவா் ரேவதி, மாவட்ட உரிமையியல் நீதிபதி பூா்ணிமா உள்ளிட்டோரைக் கொண்ட இரு அமரா்வுகளும், வட்ட நீதிமன்றங்களில் 4 அமா்வுகளும் என மொத்தம் 6 அமா்வுகள் நடைபெற்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com