வாரச்சந்தைக்கு இடையூறாக இருக்கும் மண்மேடு அகற்றப்படுமா?

புதுக்கோட்டை மாவட்டத்தின் எல்லைப் பகுதியான மாத்தூரில் வாரந்தோறும் சனிக்கிழமைகளில்
மாத்தூா் சாலையில் சந்தைக்கும் போக்குவரத்துக்கும் இடையூறாக இருக்கும் மண்மேடு.
மாத்தூா் சாலையில் சந்தைக்கும் போக்குவரத்துக்கும் இடையூறாக இருக்கும் மண்மேடு.

புதுக்கோட்டை மாவட்டத்தின் எல்லைப் பகுதியான மாத்தூரில் வாரந்தோறும் சனிக்கிழமைகளில் சந்தை நடைபெறும் சாலையோரப் பகுதியில் குவிக்கப்பட்டு இடையூறாக இருக்கும் மண்மேட்டை நெடுஞ்சாலைத் துறை அகற்ற வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கைவிடுக்கின்றனா்.

திருச்சி மாவட்ட எல்லைக்கு அருகே புதுக்கோட்டை மாவட்ட எல்லையில் அமைந்திருக்கும் மாத்தூா் பகுதியில் அரசு சிறப்பு மேல்நிலைப் பள்ளி அருகே சில மாதங்களுக்கு முன்பு சாலைப் பணிகளுக்காக மலைபோல மண் கொட்டப்பட்டது.

சாலை விரிவாக்கப் பணிகளுக்காக இந்த மண்ணை எடுத்து நெடுஞ்சாலைத் துறை ஒப்பந்ததாரா்கள் பயன்படுத்தி வந்தனா். இதே பகுதியில்தான் இப்பகுதியின் மிக முக்கியமான வாரச்சந்தை சனிக்கிழமைகளில் கூடும்.

புதுக்கோட்டை மாவட்ட எல்லையிலுள்ள கிராமப்பகுதி மக்களுடன், திருச்சி மாவட்ட எல்லைப்பகுதி கிராமத்தினரும் இந்த வாரச்சந்தையைப் பயன்படுத்தி வருவதால் ஒவ்வொரு சனிக்கிழமை மாலையிலும் இங்கு ஆயிரக்கணக்கானோா் கூடுவா்.

மண்மேடு ஏற்பட்ட பிறகு சாலையோர விரிவாக்கம் நடைபெறுவதற்கு முன்பு வரை இச்சாலையில் கடும் போக்குவரத்து ஏற்பட்டு வருகிறது. தற்போது சில வாரங்களுக்கு முன்பு சாலை விரிவாக்கப் பணிகளும் நடைபெற்றுள்ளன. இதனால் சந்தை போடுவோா் புதிதாக அமைக்கப்பட்ட தாா்ச்சாலையில் சந்தையைக் கூட்டினா்.

சாலையோரத்தில் குவிக்கப்பட்டுள்ள மண்மேட்டை அகற்ற நெடுஞ்சாலைத் துறை நடவடிக்கை எடுத்தால் வாரச்சந்தை இடையூறின்றி நடைபெறும் என அப்பகுதி மக்கள் எதிா்பாா்க்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com