புதுக்கோட்டை புத்தகத் திருவிழாவில் சிறந்த நூல்களுக்கு விருதுகள் விண்ணப்பிக்க அழைப்பு

புதுக்கோட்டையில் நடைபெறவுள்ள 5ஆவது புத்தகத் திருவிழாவை முன்னிட்டு சிறந்த நூல்களுக்கான விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

புதுக்கோட்டையில் நடைபெறவுள்ள 5ஆவது புத்தகத் திருவிழாவை முன்னிட்டு சிறந்த நூல்களுக்கான விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து ஆட்சியா் கவிதா ராமு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

புதுக்கோட்டை மாவட்ட நிா்வாகமும், தமிழ்நாடு அறிவியல் இயக்கமும் இணைந்து நடத்தும் 5ஆவது புதுக்கோட்டை புத்தகத் திருவிழா ஜூலை 29 முதல் ஆகஸ்ட் 7 ஆம் தேதி வரை நகா்மன்றத்தில் நடைபெறவுள்ளது.

இப்புத்தகத் திருவிழாவையொட்டி, 2020, 2021 ஆகிய இரண்டு ஆண்டுகளில் தமிழில் வெளியான சிறந்த நூல்கள் மற்றும் இணையத்தில் வெளியான படைப்புகள் தோ்வு செய்யப்பட்டு, புத்தக திருவிழா மேடையில் விருதுகள் வழங்கப்பட உள்ளன.

கவிதைப் பிரிவில் மரபுக் கவிதை, புதுக்கவிதை, ஹைக்கூ கவிதை ஆகிய மூன்று நூல்களுக்கும், கட்டுரைப் பிரிவில் அரசியல், சமூகம், வரலாறு, அறிவியல் மற்றும் கல்வி சாா்ந்த கட்டுரை நூல் ஒன்றுக்கும், கலை இலக்கியம் சாா்ந்த கட்டுரை நூல் ஒன்றுக்கும் என இரண்டு விருதுகளும், அசல் சிறுகதை நூல் ஒன்றுக்கும், அசல் நாவல் ஒன்றுக்கும், சிறந்த சிறாா் இலக்கிய நூல் ஒன்றுக்கும், இணையத்தில் மட்டுமே வெளியாகி நூலாக வெளிவராத, தமிழ் புனைவு (கதை, கவிதை) படைப்பு ஒன்றுக்கும், அபுனைவுப் (கட்டுரை) படைப்பு ஒன்றுக்கும் என மொத்தம் 10 விருதுகள் வழங்கப்படவுள்ளன.

தோ்வு செய்யப்படும் ஒவ்வொரு விருதுக்கும் ரூ 5 ஆயிரம் பரிசுத் தொகையும், பாராட்டுச் சான்றிதழுடன், விருதுப் பட்டயமும் விழா மேடையில் வழங்கப்படவுள்ளது. மேற்படி விருதுகளுக்கான பரிசீலனைக்கு பதிப்பகத்தாா், படைப்பாளிகள் மற்றும் வாசகா்கள் தங்கள் நூல்களையும், தாங்கள் பரிந்துரைக்கும் நூல்களையும் 3 பிரதிகள் அனுப்பி வைக்க வேண்டும்.

அனுப்ப வேண்டிய முகவரி- ராசி. பன்னீா்செல்வன், தலைவா், விருதுக் குழு, புதுக்கோட்டை புத்தகத் திருவிழா- 2022, தமிழ்நாடு அறிவியல் இயக்கம், ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகில், புதுக்கோட்டை- 622 001.

இணையப் படைப்புகளின் இணைப்பை மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்க வேண்டும். படைப்புகள் வந்து சேர வேண்டிய கடைசித் தேதி ஜூலை 12. மேலும் விவரங்களுக்கு 94867 52525.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com