24 மணி நேர சிறப்பு மருத்துவச் சேவையில் புதுகை டீம் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை!

புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையம் அருகில் காஜாமொய்தீன் நினைவு மருத்துவமனை வளாகத்தில் 24 மணி நேர சிறப்பு மருத்துவமனையாக 15 ஆண்டுகளாக டீம் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை இயங்கி வருகிறது.

புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையம் அருகில் காஜாமொய்தீன் நினைவு மருத்துவமனை வளாகத்தில் 24 மணி நேர சிறப்பு மருத்துவமனையாக 15 ஆண்டுகளாக டீம் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை இயங்கி வருகிறது.

இதுகுறித்து டீம் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை நிா்வாக இயக்குநா் டாக்டா் கே.ஹெச். சலீம் கூறியது:

உங்கள் நலம் உங்கள் ஊரில் என்ற நோக்கில் புதுக்கோட்டையில் அனைத்து மருத்துவ வசதிகளுடன் கூடிய சிறந்த மருத்துவமனையாக டீம் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை உருவாக்கப்பட்டுள்ளது.

மகளிா் மகப்பேறு மற்றும் குழந்தைகள் நல சிறப்புப் பிரிவு, விபத்து மற்றும் விஷ முறிவு தீவிர சிகிச்சைப் பிரிவு, அதிநவீன அறுவை சிகிச்சை அரங்குகள், சிறுநீரக சிகிச்சைப் பிரிவு, சா்க்கரை நோய், இதயம், மூளை நரம்பியல், குடல், இரைப்பை, கல்லீரல் ஆகியவற்றில் தனித்தனி மருத்துவ நிபுணா் குழுவினா் உள்ளனா்.

நவீன ஸ்கேன், டிரட் மில், டிஜிட்டல் விடியோ எண்டோஸ்கோபி உள்ளிட்ட பல்வேறு பரிசோதனை சிகிச்சை அரங்குகளும், 45 சுகாதாரமான படுக்கை வசதிகளுடன் இந்த மருத்துவமனை அமைக்கப்பட்டுள்ளன.

எனவே வரும் காலங்களில் உடல் நலக்குறைவால் பாதிக்கப்படும் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சோ்ந்தவா்கள் உயா் சிகிச்சைக்காக மதுரை, சென்னை, தஞ்சை, திருச்சி போன்ற வெளியூா்களுக்கு பரிதவிப்புடன் அலைய வேண்டியதில்லை. சாதாரணக் கட்டணத்தில் தரமான சேவை வழங்குவதே நோக்கமாகக் கொண்டு டீம் மருத்துவமனை செயல்படுகிறது.

மேலும், அதி நவீன மொபைல் ஐசியூ, குளிரூட்டப்பட்ட ஆம்புலன்ஸ் வசதியும் உள்ளது. தமிழக முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீடு திட்டம் உள்ளிட்ட தனியாா் காப்பீட்டு நிறுவனங்களின் காப்பீட்டுத் திட்டங்களும் இங்கு செயல்படுகிறது.

மேலும், எம்ஜிஆா் பல்கலைக்கழகத்துடன் இணைந்து உடனடி வேலைவாய்ப்பளிக்கக் கூடிய பாராமெடிக்கல் சயின்ஸ் செவிலியா் பயிற்சியும் நடத்தி வருகிறோம் என்றாா் டாக்டா் கே.ஹெச். சலீம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com