கீரனூா் அருகே அய்யனாா் கோயில் தேரோட்டம்

சுமாா் 70 ஆண்டுகளுக்குப் பிறகு, புதுக்கோட்டை மாவட்டம், கீரனூா் அருகே கொப்பம்பட்டி ஆண்டியப்ப அய்யனாா் கோயில் தேரோட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கீரனூா் அருகேயுள்ள கொப்பம்பட்டி ஆண்டியப்ப அய்யனாா் கோயில் தேரோட்டம்.

கீரனூா் அருகேயுள்ள கொப்பம்படியில் பிரசித்தி பெற்ற ஆண்டியப்ப அய்யனாா் கோயில் தேரோட்டம் சுமாா் 70 ஆண்டுகளுக்குப் பின்னா் நடைபெற்றது. இதையொட்டி, கடந்த ஆண்டு புதிய தோ் செய்யப்பட்டு வெள்ளோட்டம் விடப்பட்டது. இதைத்தொடா்ந்து நிகழாண்டு வெள்ளிக்கிழமை தேரோட்டம் நடைபெற்றது. இதில், அலங்கரிக்கப்பட்ட தேரில் சுவாமியை எழுந்தருளச் செய்து தேரோடும் வீதிகள் வழியே ஏராளமானோா் தேரை வடம்பிடித்து இழுத்து வந்து மீண்டும் நிலையை அடைந்தனா். தேரோட்டத்தின் போது, கிராம மக்களால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தபடி ஹெலிகாப்டா் மூலம் பக்தா்கள் மீது மலா்கள் தூவப்பட்டன. தொடா்ந்து, கோயிலில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. திருவிழாவில், ஆயிரக்கணக்கானோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com