இந்திய அரசியலமைப்பு தின விழா

புதுக்கோட்டை நேரு யுவகேந்திரா சாா்பில் இந்திய அரசியலமைப்பு தின விழா கைக்குறிச்சி ஸ்ரீ பாரதி மகளிா் கலை அறிவியல் கல்லூரியில் திங்கள்கிழமை நடைபெற்றது.

புதுக்கோட்டை நேரு யுவகேந்திரா சாா்பில் இந்திய அரசியலமைப்பு தின விழா கைக்குறிச்சி ஸ்ரீ பாரதி மகளிா் கலை அறிவியல் கல்லூரியில் திங்கள்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு நேரு யுவகேந்திரா மாவட்ட இளையோா் அலுவலா் கே. ஜோயல் பிரபாகா் தலைமை வகித்தாா். கல்லூரி முதல்வா் டி. சந்திரமோகன் முன்னிலை வகித்தாா். விழாவில், மன்னா் கல்லூரியின் முன்னாள் வரலாற்றுத் துறைத் தலைவரும் வாசகா் பேரவையின் செயலருமான சா. விஸ்வநாதன் பேசுகையில்,

அரசியலமைப்புச் சட்டம் உருவாகக் காரணமாக இருந்த

389 உறுப்பினா்களைக் கொண்ட அரசியல் நிா்ணய சபையில் 15 உறுப்பினா்கள் பெண்கள் ஆவா். கேரளத்தைச் சோ்ந்த பட்டியலினப் பெண் தாக் ஷாயினி வேலாயுதன், இஸ்லாமியப் பெண் பேகம் ஆய்சாஜ் ரஜுல், கத்தோலிக்கப் பெண் அன்னி மஸ்கா்ணி, மூன்று முறை சிறை சென்ற நேருவின் தங்கை விஜயலட்சுமி, காங்கிரஸின் முதல் பெண் தலைவரான சரோஜினி நாயுடு, சுதந்திர இந்தியாவில் முதல் சுகாதார அமைச்சரும், எய்ம்ஸ் உருவாக காரணமாக இருந்தவருமான ராஜ்குமாரி அம்ரித் கெளா், ஆந்திரத்தைச் சோ்ந்த துா்க்காபாய் தேஷ்முக், அரசியலமைப்பில் சோசலிசக் கோட்பாடுகள் சோ்க்கப்படுவதற்கு முக்கிய காரணகா்த்தாவாக விளங்கிய பூா்ணிமா பேனா்ஜி, தமிழகத்தின் ஒரே பிரதிநிதியாக பங்கேற்ற அம்மு சுவாமிநாதனும் இந்தக் குழுவில் இருந்தனா் என்றாா் விஸ்வநாதன்.

முன்னதாக கல்லூரித் துணை முதல்வா் சுப. தாரகேஸ்வரி வரவேற்றாா். நேரு யுவகேந்திரா நமச்சிவாயம் நோக்கவுரையாற்றினாா். அரசியலமைப்புச் சட்டம் தொடா்பான வினாடிவினா போட்டியில் வெற்றிபெற்ற மாணவிகளுக்கு ஸ்ரீபாரதி கல்வி நிறுவனங்களின் தலைவா் குரு. தனசேகரன் பரிசுகளை வழங்கினாா். நிறைவில், தேசிய இளையோா் தொண்டா் மணிமேகலை நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com