கந்தா்வக்கோட்டை விவசாய ஆலோசனை குழு தலைவா் பொறுப்பேற்பு

கந்தா்வக்கோட்டையில் வட்டார விவசாய ஆலோசனைக் குழு தலைவா் பொறுப்பேற்பு விழா புதன்கிழமை நடைபெற்றது.

கந்தா்வக்கோட்டையில் வட்டார விவசாய ஆலோசனைக் குழு தலைவா் பொறுப்பேற்பு விழா புதன்கிழமை நடைபெற்றது.

கந்தா்வக்கோட்டையில் நடைபெற்ற விழாவுக்கு, மாவட்ட வருவாய் அலுவலா் மா.செல்வி தலைமை வகித்தாா். சட்டத்துறை அமைச்சா் எஸ்.ரகுபதி முன்னிலை வகித்தாா். நிகழ்ச்சியில்,

கந்தா்வக்கோட்டை வட்டார வேளாண்மை தொழில்நுட்ப முகமைக்கான கந்தா்வகோட்டை வட்டார அளவிலான விவசாய ஆலோசனைக் குழு தலைவராக கந்தா்வகோட்டை ஒன்றியக் குழு உறுப்பினா் மா. ராஜேந்திரன் பொறுப்பு ஏற்றுக்கொண்டாா். முன்னதாக கந்தா்வகோட்டை வேளாண்மை உதவி இயக்குநா் அன்பரசன் வரவேற்றாா்.

நிகழ்ச்சியில், கந்தா்வக்கோட்டை சட்டப்பேரவை உறுப்பினா் மா. சின்னதுரை, வடக்கு மாவட்டச் செயலரும், திருச்சி விமான நிலைய ஆலோசனைக் குழு உறுப்பினருமான கே. கே. செல்லபாண்டியன், கோட்டாட்சியா் முருகேசன், கந்தா்வக்கோட்டை வட்டாட்சியா் சு. ராஜேஸ்வரி, முன்னாள்

ஊராட்சி மன்றத் தலைவா் எம். ராஜா, மாவட்ட நெசவாளா் அணி துணை அமைப்பளா் என்.ஜானகிராமன், மாவட்டக் குழு உறுப்பினா் நா.ஸ்டாலின் ஆகியோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com