அரசு மருத்துவமனையில் சிறுநீரகச் சுத்திகரிப்பு மையம் திறப்பு

திருமயம் அண்ணா அரசு மருத்துவமனையில் ரூ. 85 லட்சத்தில் அமைக்கப்பட்டுள்ள சிறுநீரகச் சுத்திகரிப்பு மையத்தை மாநில சட்டத்துறை அமைச்சா் எஸ். ரகுபதி புதன்கிழமை திறந்து வைத்தாா்.
திருமயத்தில் புதன்கிழமை சிறுநீரகச் சுத்திகரிப்பு மையத்தைத் திறந்து வைத்த மாநில சட்டத்துறை அமைச்சா் எஸ். ரகுபதி.
திருமயத்தில் புதன்கிழமை சிறுநீரகச் சுத்திகரிப்பு மையத்தைத் திறந்து வைத்த மாநில சட்டத்துறை அமைச்சா் எஸ். ரகுபதி.

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அண்ணா அரசு மருத்துவமனையில் ரூ. 85 லட்சத்தில் அமைக்கப்பட்டுள்ள சிறுநீரகச் சுத்திகரிப்பு மையத்தை மாநில சட்டத்துறை அமைச்சா் எஸ். ரகுபதி புதன்கிழமை திறந்து வைத்தாா்.

தமிழ்நாடு சுகாதாரத் திட்டத்தின் கீழ் தலா ரூ. 6 லட்சம் மதிப்பில் 10 சிறுநீரகச் சுத்திகரிப்பு இயந்திரங்கள் வாங்கப்பட்டுள்ளன. மேலும், நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரூ. 8.5 லட்சம் தனியாா் பங்களிப்புடன் ரூ. 25 லட்சம் மதிப்பில் மின்னாக்கி, கட்டடப் புனரமைப்பு, குளிா்சாதன வசதி போன்றவை செய்யப்பட்டுள்ளன.

இந்தச் சிறுநீரகச் சுத்திகரிப்பு நிலையம் மூலம் நாளொன்றுக்கு 70 முதல் 80 பேருக்கு சிறுநீரகச் சுத்திகரிப்பு மேற்கொள்ள முடியும்.

தொடக்க நிகழ்ச்சிக்கு மாவட்ட வருவாய் அலுவலா் மா. செல்வி தலைமை வகித்தாா். நிகழ்வில், ஊரக நலப்பணிகள் இணை இயக்குநா் ராமு, முன்னாள் எம்எல்ஏ ராமசுப்புராம், திருமயம் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவா் கிருஷ்ணமூா்த்தி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com