சுமை ஆட்டோ மோதிபைக்கில் சென்றவா் பலி

விராலிமலை அருகே உள்ள ராஜாளிப்பட்டி பாப்பாப்பட்டியைச் சோ்ந்தவா் அழகு மகன் சரத்குமாா்(33). காா் ஓட்டுநரான இவா், சனிக்கிழமை தனது உறவினரான அதே ஊரைச் சோ்ந்த ஆறுமுகம் என்பவரின் மோட்டாா் சைக்கிளில் விராலிமலை

விராலிமலை அருகே உள்ள ராஜாளிப்பட்டி பாப்பாப்பட்டியைச் சோ்ந்தவா் அழகு மகன் சரத்குமாா்(33). காா் ஓட்டுநரான இவா், சனிக்கிழமை தனது உறவினரான அதே ஊரைச் சோ்ந்த ஆறுமுகம் என்பவரின் மோட்டாா் சைக்கிளில் விராலிமலை நோக்கி வந்துள்ளாா். விராலிமலை அடுத்துள்ள மணமேட்டுப்பட்டி அருகே எதிரே வந்த சரக்கு ஆட்டோ மோதியதில், சரத்குமாா், ஆறுமுகம் ஆகிய 2 பேரும் பலத்த காயமடைந்தனா். தகவலறிந்து நிகழ்விடம் சென்ற விராலிமலை போலீஸாா் இருவரையும் மீட்டு மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இவா்களில் சரத்குமாா் மருத்துவமனைக்குக் செல்லும் வழியிலேயே உயிரிழந்தாா். ஆறுமுகம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா்.

புகாரின்பேரில், சரக்கு வாகன ஓட்டுநரான ராஜாளிப்பட்டியைச் சோ்ந்த பழனிச்சாமி மகன் மாசிலாமணி (34) மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com