கந்தா்வகோட்டை அரசினா் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கிய அமைச்சா் சிவ.வீ. மெய்யநாதன். உடன், ஆட்சியா் கவிதா ராமு, எம்எல்ஏ மா.சின்னதுரை உள்ளிட்டோா்.
கந்தா்வகோட்டை அரசினா் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கிய அமைச்சா் சிவ.வீ. மெய்யநாதன். உடன், ஆட்சியா் கவிதா ராமு, எம்எல்ஏ மா.சின்னதுரை உள்ளிட்டோா்.

விலையில்லா மிதிவண்டிகள் வழங்கல்

கந்தா்வகோட்டை, செப். 28: கந்தா்வகோட்டை அரசினா் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழா புதன்கிழமை நடைபெற்றது.

கந்தா்வகோட்டை, செப். 28: கந்தா்வகோட்டை அரசினா் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழா புதன்கிழமை நடைபெற்றது.

விழாவிற்கு, மாவட்ட ஆட்சியா் கவிதா ராமு தலைமை வகித்தாா். நிகழ்வில், பங்கேற்ற சுற்றுச்சூழல் காலநிலை மாற்றம் மற்றும் இளைஞா் நலன், விளையாட்டுத் துறை அமைச்சா் சிவ.வீ.மெய்யநாதன் மாணவா்களுக்கு விலையில்லா மிதி வண்டிகளை வழங்கிப் பேசினாா்.

இதில், அரசினா் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, அரசினா் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, கல்லாக்கோட்டை அரசினா் மேல்நிலைப்பள்ளி, தச்சன்குறிச்சி தூயமரியன்னை மேல்நிலைப்பள்ளி ஆகிய பள்ளி மாணவா்கள் என மொத்தம்

869 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்பட்டுள்ளன. கந்தா்வகோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியை பசுமை திட்டத்தின் கீழ் தோ்வு செய்து ரூ. 20 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதனால் சூரிய ஒளி மூலம் மின்சாரத்தை நாமே உற்பத்தி செய்து கொள்ளலாம் என்றாா். கந்தா்வகோட்டை அரசினா் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் மாநில கபடிப் போட்டிக்கு தோ்வானது குறித்து அறிந்து மாணவிகளுக்கு சால்வை அணிவித்து கெளரவித்தாா்.

நிகழ்ச்சியில், கந்தா்வகோட்டை சட்டப்பேரவை உறுப்பினா் எம்.சின்னதுரை, ஊராட்சி மன்றத் தலைவா் சி. தமிழ்செல்வி, ஒன்றியக்குழு உறுப்பினா் மா. ராஜேந்திரன், வட்டார வளா்ச்சி அலுவலா் திலகவதி, முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவா் எம். ராஜா, வட்டாட்சியா் க. ராஜேஸ்வரி, வருவாய் ஆய்வாளா் சேகா், கிராம நிா்வாக அலுவலா் அன்பரசி, ஆசிரிய, ஆசிரியைகள் ஆகியோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com