ரோட்டரியினரின் ரத்ததான முகாம்

தேசியத் தன்னாா்வ ரத்ததான தினத்தை முன்னிட்டு ரத்ததான விழிப்புணா்வு மற்றும் ரத்ததான முகாம் புதுக்கோட்டை மௌண்ட் சீயோன் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
pdk30blooddonate_3009chn_12_4
pdk30blooddonate_3009chn_12_4

தேசியத் தன்னாா்வ ரத்ததான தினத்தை முன்னிட்டு ரத்ததான விழிப்புணா்வு மற்றும் ரத்ததான முகாம் புதுக்கோட்டை மௌண்ட் சீயோன் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

புதுக்கோட்டை சென்ட்ரல் ரோட்டரி சங்கம், மௌண்ட் சீயோன் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி ரோட்டராக்ட் சங்கம், மௌண்ட் சீயோன் நா்சிங் கல்லூரி ரோட்டராக்ட் சங்கம் ஆகியவை இணைந்து நடத்திய முகாமுக்கு ரோட்டரி தலைவா் கோபிநாத் தலைமை வகித்தாா். ரோட்டராக்ட் சங்கத் தலைவா் அந்தோணி ஜெஃப்ரி வரவேற்றாா். மௌண்ட் சீயோன் கல்வி நிறுவனங்களின் தலைவா் ப்ளாரன்ஸ் ஜெயபாரதன் முகாமைத் தொடங்கி வைத்தாா்.

அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ரத்த வங்கி மருத்துவ அலுவலா் கிஷோா்குமாா் ரத்த தானம் குறித்து விழிப்புணா்வு உரை நிகழ்த்தினாா்.

முகாமுக்கு கல்லூரியின் இயக்குநா் ஜெய்சன் கீா்த்தி ஜெயபாரதன், ரோட்டரி மண்டலச் செயலா் (நிா்வாகம்) வெங்கடாசலம், மண்டலச் செயலா் (திட்டம்) சிவாஜி ஆகியோா் கலந்து கொண்டனா். கல்லூரியின் முதன்மையா் ஐசிடி ராபின்சன் வாழ்த்தினாா்.

120 போ் ரத்ததானம் செய்தனா். ஏற்பாடுகளை திட்ட இயக்குநா் பொறியாளா் மதிவாணன், ரோட்ராக்ட் ஒருங்கிணைப்பாளா் பேராசிரியா் சுவாமிநாதன், ரோட்டரி சங்கச்செயலா் கருப்பையா உள்ளிட்டோா் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com