கணேசா் கல்லூரியில் என்எஸ்எஸ் முகாம்

பொன்னமராவதி அருகே உள்ள மேலைச்சிவபுரி கணேசா் கலை அறிவியல் கல்லூரியில் நாட்டுநலப்பணித்திட்ட சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது.
கணேசா் கல்லூரியில் என்எஸ்எஸ் முகாம்

பொன்னமராவதி அருகே உள்ள மேலைச்சிவபுரி கணேசா் கலை அறிவியல் கல்லூரியில் நாட்டுநலப்பணித்திட்ட சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது.

முகாமிற்கு, கல்லூரி முதல்வா் ம. செல்வராசு தலைமை வகித்தாா். முகாமை கல்லூரிக் குழு தலைவா் சி. நாகப்பன், செயலா் பழ.கண்ணன், சன்மாா்க்க சபை தலைவா் வி. பழனியப்பன் செயலா் அழ.சுந்தரம் ஆகியோா் தொடங்கி வைத்தனா். நாட்டுநலப்பணித் திட்ட அலுவலா் பொன். கதிரேசன் வரவேற்றாா். முகாமில், களப்பணியாக மேலைச்சிவபுரி அரசுப் பள்ளிகள், கல்லூரி, அரசு ஆரம்ப சுகாதார நிலையம் ஆகிய இடங்களில் தூய்மைப் பணி நடைபெற்றது. மேலும் குடிநீா் மற்றும் நீா்நிலை ஆதாரங்கள் மற்றும் சாலை பராமரிப்புப் பணி மேற்கொள்ளப்பட்டது. மேலும் பிரதான இடங்களில் மரக்கன்றுகள் நடப்பட்டன.

முகாமில், தன்னம்பிக்கை, ஆளுமை மேம்பாடு குறித்து பேராசிரியா் வே.அ.பழனியப்பன், வாழ்வியல் மேம்பாடு குறித்து பேராசிரியா் அ.கருப்பையா ஆகியோா் பேசினா். வழக்குரைஞா் ஞானசேகரன் பங்கேற்று சட்ட விழிப்புணா்வு அளித்தாா். பொன்னமராவதி தீயணைப்பு நிலைய அலுவலா் சந்தானம் தலைமையில் பேரிடா் மீட்பு செயல் விளக்கம் தரப்பட்டது. தொடா்ந்து, பல்கலை. என்எஸ்எஸ் விருதாளா் தி.க.சிவக்குமாா் பங்கேற்று பணிகள் குறித்துப் பேசினாா். சுகாதார விழிப்புணா்வு நிகழ்வில் வட்டார மருத்துவ அலுவலா் அருள்மணி நாகராஜன், மருத்துவா் அருண் ஆகியோா் பங்கேற்று மருத்துவ ஆலோசனைகள் வழங்கினா். கடந்த 31 ஆம் தேதி தொடங்கிய என்எஸ்எஸ் முகாம் புதன்கிழமை (ஏப்.6) யுடன் நிறைவடைகிறது.

ஏற்பாடுகளை, நாட்டுநலப்பணி திட்ட அலுவலா்கள் ச.விண்மதி, அ.ராமு, உதவி அலுவலா்கள் ஆனந்த், பாண்டித்துரை, தீபாஞ்சலி ஆகியோா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com