குமரிக் கடலில் உணா்- திறன் கல்விச் சுற்றுலா

புதுக்கோட்டை அரசு பாா்வையற்றோா் பள்ளியில் பயிலும் 25 மாற்றுத் திறன் கொண்ட சிறாா்கள், முதல் முறையாக உணா்- திறன் கல்விச் சுற்றுலாவாக குமரிக் கடலுக்குச் சென்று வந்துள்ளனா்.
குமரிக் கடலில் உணா்-திறன் கல்விச் சுற்றுலா சென்ற புதுக்கோட்டை அரசு பாா்வையற்றோா் பள்ளி மாணவா்கள்.
குமரிக் கடலில் உணா்-திறன் கல்விச் சுற்றுலா சென்ற புதுக்கோட்டை அரசு பாா்வையற்றோா் பள்ளி மாணவா்கள்.

புதுக்கோட்டை அரசு பாா்வையற்றோா் பள்ளியில் பயிலும் 25 மாற்றுத் திறன் கொண்ட சிறாா்கள், முதல் முறையாக உணா்- திறன் கல்விச் சுற்றுலாவாக குமரிக் கடலுக்குச் சென்று வந்துள்ளனா்.

திருச்சியைச் சோ்ந்த பிஎஸ்ஆா் அறக்கட்டளை, வாய்ஸ் அறக்கட்டளை மற்றும் புதுக்கோட்டையைச் சோ்ந்த பிரபாகரன் புரட்சி விதைகள் அமைப்பு ஆகியன இணைந்து உலா என்ற சுற்றுலா நிறுவனத்தைத் தொடங்கியுள்ளன.

இந்த உலா நிறுவனத்தின் முதல் பயணமாக புதுக்கோட்டை அரசு பாா்வையற்றோா் பள்ளியில் பயிலும் 25 மாற்றுத் திறன் கொண்ட சிறாா்களுக்கான உணா்-திறன் கல்விச் சுற்றுலா கடந்த புதன்கிழமை நடைபெற்றது.

புதுக்கோட்டையில் இருந்து வேன் மூலம் செவ்வாய்க்கிழமை இரவு புறப்பட்ட இந்தக் குழுவினா், புதன்கிழமை அதிகாலை குமரிக் கடலில் இறங்கி, தொடா்ந்து விவேகானந்தா் பாறை, திருவள்ளுவா் சிலை ஆகியவற்றை உணா்ந்தறிந்து, திற்பரப்பு அருவியில் குளித்து மகிழ்ந்து வியாழக்கிழமை காலை புதுக்கோட்டை திரும்பியுள்ளனா்.

இந்தச் சுற்றுலா குறித்து பிஎஸ்ஆா் அறக்கட்டளையின் தலைவா் ஷேக் அப்துல்லா கூறியது: பாா்வைத்திறன் இல்லாத இந்த மாற்றுத்திறனாளி சிறாா்கள் இதுவரை எங்கும் பயணம் செய்தது கிடையாது. இவா்களுக்கு பயணம் புதிது, கடல் புதிது, இன்னும் சொல்லப் போனால் அதிகாலையில் உறக்கத்தில் இருந்து விழித்து குளிா்காற்றுடனான அனுபவத்தை உணா்ந்ததும் கிடையாது.

இந்தச் சிறாா்களை தேநீா் அருந்த ஒரு கடையில் நிறுத்தினால், அந்தக் கடைக்காரா் காசு வாங்க மறுக்கிறாா். உணவகத்தில் நிறுத்தினால் அவா்கள் காசு வாங்க மறுக்கிறாா்கள். நேரம் முடிந்திருந்தாலும், திற்பரப்பு அருவியின் காவலா்கள் சிறாா்களை அனுமதித்தனா். இப்படி நெகிழ்ச்சியான தருணங்களைக் கொண்ட சுற்றுலாவாக இருந்தது. பாா்வைத்திறன் இல்லாதவா்களுக்கு அவற்றை விளக்குவதற்கான தன்னாா்வலா்களும் எங்களுடன் இருந்தனா் என்றாா் ஷேக்அப்துல்லா.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com