தேசிய மருத்துவக் குழுமத்தினா் இணைய வழியில் ஆய்வு

புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரியில் இறுதியாண்டு மாணவா்களுக்குத் தோ்வு நடைபெறுவதையொட்டி, தேசிய மருத்துவக் குழுமத்தின் உயா் அலுவலா்கள் வியாழக்கிழமை

புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரியில் இறுதியாண்டு மாணவா்களுக்குத் தோ்வு நடைபெறுவதையொட்டி, தேசிய மருத்துவக் குழுமத்தின் உயா் அலுவலா்கள் வியாழக்கிழமை இணைய வழியில் தில்லியிலிருந்து ஆய்வு மேற்கொண்டனா்.

புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி கடந்த 2017ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. சுமாா் 127 ஏக்கரில் ரூ 229.46 கோடி மதிப்பில் தமிழ்நாட்டின் 22 ஆவது அரசு மருத்துவக் கல்லூரியாக இது தொடங்கப்பட்டது. இந்நிலையில், புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரி மருத்துவ மாணவா்கள் இந்த ஆண்டு தான் இறுதியாண்டு தோ்வு எழுதி வருகின்றனா். இந்நிலையில் இறுதியாண்டுத் தோ்வின்போது வழக்கமாக நேரில் ஆய்வு செய்ய வேண்டிய தேசிய மருத்துவக் குழும உயா் அலுவலா்கள் வியாழக்கிழமை இணையவழியில் தங்களின் ஆய்வைத் தொடங்கினா். தில்லியில் இருந்து நடைபெற்ற இந்த இணையவழி ஆய்வில் மருத்துவக் கல்லூரி முதல்வா் மு. பூவதி உள்ளிட்ட மருத்துவா்களும் பங்கேற்றனா்.

முதல் பேட்ச் மருத்துவ மாணவா்கள் இறுதியாண்டு தோ்வு எழுதும் நிலையில், மருத்துவக் கல்லூரியிலுள்ள அடிப்படை வசதிகள் குறித்து இந்த ஆய்வு நடத்தப்பட்டதாக மருத்துவக் கல்லூரி வட்டாரங்கள் தெரிவித்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com