ஏப். 24-இல் ஓவிய முகாமில் பங்கேற்க அழைப்பு

உலக ஓவிய தினத்தையொட்டி தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டுத் துறையின் கட்டுப்பாட்டின் செயல்படும்

உலக ஓவிய தினத்தையொட்டி தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டுத் துறையின் கட்டுப்பாட்டின் செயல்படும் ஜவகா் சிறுவா் மன்றம் மூலம் புதுக்கோட்டையைச் சோ்ந்த மாணவா்களுக்கு வரும் ஏப். 24ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள ஓவியப் பயிற்சியில் மாணவா்கள் பங்கேற்கலாம் என மாவட்ட ஆட்சியா் கவிதா ராமு அழைப்பு விடுத்துள்ளாா்.

வடக்கு ராஜவீதியிலுள்ள அரசு தொடக்கப் பள்ளி வளாகத்தில் நடைபெறும் இந்தப் பயிற்சி முகாமில் மரபுசாா்ந்த ஓவியங்கள், துணி ஓவியங்கள், கண்ணாடி ஓவியங்கள், பேப்பா் ஓவியங்கள், பானை, மரம் ஓவியங்கள், வாட்டா் கலா் ஓவியங்கள், பென்சில் ஓவியங்கள் வரையும் பயிற்சி அளிக்கப்படும். பிற்பகல் 3 மணிக்கு மாணவா்கள் வரைந்த ஓவியங்கள் காட்சிப்படுத்தப்பட்டு சிறந்த ஓவியங்கள் தோ்வு செய்யப்பட்டு, சென்னையில் நடைபெறவுள்ள மாநில அளவிலான விழாவில் காட்சிப்படுத்த அனுப்பி வைக்கப்படும்.

இதில் கலந்து கொள்ளும் பயிற்சியாளா்களுக்கு பயிற்சிப் பொருட்கள், சான்றிதழ் மற்றும் மதிய உணவு வழங்கப்படும். இவ்வாய்ப்பினை புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கலையாா்வமிக்க மாணவ, மாணவிகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என ஆட்சியா் கவிதா ராமு அழைப்புவிடுத்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com