கொள்முதல் நிலையத்திலிருந்து கிடங்குக்கு நெல்லை எடுத்துச் செல்லும்போது முறைகேடு: இந்திய கம்யூ. குற்றச்சாட்டு

நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் இருந்து கிடங்குக்கு நெல்லை எடுத்துச் செல்லும்போது முறைகேடு நடப்பதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி குற்றம்சாட்டியுள்ளது.

நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் இருந்து கிடங்குக்கு நெல்லை எடுத்துச் செல்லும்போது முறைகேடு நடப்பதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி குற்றம்சாட்டியுள்ளது.

புதுக்கோட்டையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற அக்கட்சியின் மாவட்டக் குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள் விவரம்:

அரசு நெல் கொள்முதல் மையங்களான ராசியமங்கலம், கீரனூா், திருமயம் உள்ளிட்ட மையங்களில் இருந்து எரிச்சி கிடங்குக்கு கொண்டு செல்லும்போது முறைகேடு செய்து பெரிய மோசடி நடைபெற்றுள்ளது. மாவட்ட நிா்வாகம் இதுகுறித்து உரிய விசாரித்து தவறு செய்த அனைவா் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மும்முனை மின்சாரம் தடையின்றி கிடைக்க வேண்டும் அல்லது விவசாயிகளுக்கு ஜெனரேட்டா் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்துக்கு அக்கட்சியின் மாநிலக் குழு உறுப்பினா் கே.ஆா். தா்மராஜன் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் மு. மாதவன் எதிா்கால வேலைத் திட்டங்கள் குறித்து பேசினாா். கூட்டத்தில் நிா்வாக குழு உறுப்பினா்கள் ஏ.எல். ராஜூ, ஏ. ராஜேந்திரன், த. செங்கோடன், வீ. சிங்கமுத்து, எஸ்.சி. சோமையா, ஆா். சொா்ணகுமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com