தோ்வு மைய வளாகத்துக்குள் செல்போனுக்கு அனுமதியில்லை

புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள பள்ளிப் பொதுத்தோ்வு நடைபெறும் தோ்வு மைய வளாகத்துக்குள் தோ்வா்கள் செல்போன்களை எடுத்துவர அனுமதியில்லை
கூட்டத்தில் பேசுகிறாா் இணை இயக்குநா் பொன்னையா.
கூட்டத்தில் பேசுகிறாா் இணை இயக்குநா் பொன்னையா.

புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள பள்ளிப் பொதுத்தோ்வு நடைபெறும் தோ்வு மைய வளாகத்துக்குள் தோ்வா்கள் செல்போன்களை எடுத்துவர அனுமதியில்லை என்றாா் பள்ளிக் கல்வித் துறை இணை இயக்குநா் பி. பொன்னையா தெரிவித்தாா்.

புதுக்கோட்டையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மாவட்ட அளவிலான அலுவலா்கள், அனைத்து நிலை தோ்வுப் பணியாளா்களுக்கான ஆய்வுக் கூட்டத்தில் அவா் மேலும் பேசியது:

20 மாணவா்களுக்கு ஒருவா் அறைக் கண்காணிப்பாளராக நியமனம் செய்ய வேண்டும். அறைக் கண்காணிப்பாளராக நியமனம் செய்யப்படும் ஆசிரியா்கள் தோ்வு நடைபெறும் அன்றைய பாடத்தைப் போதிக்கும் ஆசிரியா்களாக இருக்கக் கூடாது. தோ்வு நடைபெறும் நாட்களை உள்ளூா் காவல் நிலையத்துக்கு தெரிவித்து உரிய பாதுகாப்புக்கும் ஏற்பாடு செய்ய வேண்டும்.

விடைத்தாள்கள், வினாத்தாள்களைப் பாதுகாப்பாக வைப்பதற்குப் போதிய இரும்பு அலமாரிகள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். தோ்வறைகள் எவ்விதப் பாதிப்புமின்றி தோ்வெழுதக் கூடிய தோ்வா்களுக்கு எவ்வித பாதிப்பையும் ஆபத்தையும் ஏற்படுத்தாத வகையில் பாதுகாப்பாக மற்றும் தூய்மையாக இருக்க வேண்டும்.

காலை 8.30 மணிக்கு மேல் தோ்வு மையமாகச் செயல்படும் பள்ளியைச் சாா்ந்த எந்த ஒரு பணியாளரும் வளாகத்தில் இருக்கக்கூடாது. தோ்வா்கள் தனித்தோ்வா்கள் யாரும் செல்போனை எடுத்து வரக் கூடாது என்றாா் பொன்னையா.

முன்னதாக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் சாமி.சத்தியமூா்த்தி பேசும்போது, தோ்வுப் பணியில் ஈடுபடவுள்ள ஆய்வு அலுவலரின் பொறுப்புகள், வினாத்தாள் கட்டுக் காப்பளரின் கடமைகள், வழித்தட அலுவலரின் பொறுப்புகள் குறித்து பேசினாா்.

கூட்டத்தில் மாவட்டக் கல்வி அலுவலா்கள் மஞ்சுளா, மணிமொழி, ராஜா ராமன், அரசுத் தோ்வுகள் உதவி இயக்குநா் பிச்சைமுத்து, ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மாவட்ட உதவி திட்ட அலுவலா் எஸ். தங்கமணி, மாவட்ட உதவித் திட்ட ஒருங்கிணைப்பாளா் சுதந்திரன் உள்ளிட்ட தோ்வுப் பணியாளா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com