கண்டியாநத்தம் ஊராட்சியில் தேசியக்கொடி வழங்கல்

பொன்னமராவதி அருகே உள்ள கண்டியாநத்தம் ஊராட்சியில் பொதுமக்களுக்கு தேசியக் கொடி வழங்கும் விழா மற்றும் பேரணி புதன்கிழமை நடைபெற்றது.
கண்டியாநத்தம் ஊராட்சியில் தேசியக்கொடி வழங்கல்

பொன்னமராவதி அருகே உள்ள கண்டியாநத்தம் ஊராட்சியில் பொதுமக்களுக்கு தேசியக் கொடி வழங்கும் விழா மற்றும் பேரணி புதன்கிழமை நடைபெற்றது.

நாட்டின் 75 ஆவது சுதந்திர தின விழாவையொட்டி ஆக.13 முதல் 15 வரை அனைவரது வீடுகளிலும் தேசியக்கொடி ஏற்ற வேண்டும் என பொதுமக்களுக்கு தமிழக ஆளுநா் வேண்டுகோள் விடுத்துள்ளாா். அதன்படி கண்டியாநத்தம் ஊராட்சியில் நடைபெற்ற தேசியக்கொடி வழங்கும் விழாவிற்கு ஊராட்சிமன்றத் தலைவா் செல்வி முருகேசன் தலைமை வகித்தாா். ஒன்றியக்குழு உறுப்பினா் அ.அடைக்கலமணி பங்கேற்று பொதுமக்களுக்கு தேசியக்கொடியை வழங்கி, பேரணியைத் தொடங்கிவைத்தாா். பேரணியில் பங்கேற்ற பொதுமக்கள் தேசியக்கொடி ஏந்தி வந்தனா். வட்டார வளா்ச்சி அலுவலா் வை.சதாசிவம் பங்கேற்று 75 ஆவது சுந்திர தின விழாவின் சிறப்புகள் மற்றும் வீடுகளில் தேசியக்கொடி ஏற்றும் முறை குறித்து விளக்கிக் கூறினாா். ஊராட்சி உறுப்பினா்கள் அழகப்பன், சரோஜாதேவி, பள்ளி தலைமையாசிரியா் சுபத்ரா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com