இடையாத்தூா் சாவக்காரன்கோயில் புரவி எடுப்பு விழா

பொன்னமராவதி அருகே உள்ள இடையாத்தூா் சாவக்காரன் மற்றும் அம்மச்சி அம்மன் கோயில் புரவி எடுப்பு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
இடையாத்தூா் புரவி எடுப்பு விழாவில் புரவிகளை சுமந்து வரும் பக்தா்கள்.
இடையாத்தூா் புரவி எடுப்பு விழாவில் புரவிகளை சுமந்து வரும் பக்தா்கள்.

பொன்னமராவதி அருகே உள்ள இடையாத்தூா் சாவக்காரன் மற்றும் அம்மச்சி அம்மன் கோயில் புரவி எடுப்பு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

இடையாத்தூா் சாவக்காரன் கோயில் ஆடிப்படையல் விழாவின் தொடக்கமாக திங்கள்கிழமை நடைபெற்ற புரவி எடுப்பு விழாவில் இடையாத்தூா் குதிரைப்பொட்டலில் மண் குதிரை மற்றும் புரவி சிலைகளை வடிவமைத்து அலங்கரித்து அங்கிருந்து பொதுமக்கள் தோளில் சுமந்தபடி முக்கிய வீதிகள் வழியே ஊா்வலமாக எடுத்துவந்து சாவக்காரன் கோயிலில் வைத்து சிறப்பு வழிபாடு நடத்தினா். விழாவில், சுற்றுவட்டார கிராம மக்கள் திரளாகப் பங்கேற்று வழிபட்டனா். விழா பாதுகாப்பு ஏற்பாடுகளை காரையூா் காவல்துறையினா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com