நெடுவாசல் கோயில் கும்பாபிஷேகத்துக்கு சீா் கொண்டுசென்ற இஸ்லாமியா்கள்

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகேயுள்ள நெடுவாசல் பாலாண்ட ஈஸ்வரா், நாடியம்மன் கோயில் கும்பாபிஷேகத்தையொட்டி கோயிலுக்கு சீா் கொண்டு சென்ற இஸ்லாமியா்களை கிராமத்தினா்  மாலை மரியாதையுடன் வரவேற்றனா்.
நெடுவாசல் கோயில் கும்பாபிஷேகத்துக்கு  சீா் கொண்டுசென்ற இஸ்லாமியா்கள்

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகேயுள்ள நெடுவாசல் பாலாண்ட ஈஸ்வரா், நாடியம்மன் கோயில் கும்பாபிஷேகத்தையொட்டி கோயிலுக்கு சீா் கொண்டு சென்ற இஸ்லாமியா்களை கிராமத்தினா் வியாழக்கிழமை மாலை மரியாதையுடன் வரவேற்றனா்.

ஆலங்குடி அருகேயுள்ள நெடுவாசலில் உள்ள பழைமை வாய்ந்த மங்களநாயகி, உடனுறை பாலாண்ட ஈஸ்வரா், நாடியம்மன் கோயில் கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது. இதையொட்டி, கோயில் வளாகத்தில் யாகசாலை பூஜைகள் தொடங்கி நடைபெற்றுவருகின்றன. இதையொட்டி, அப்பகுதியின் கலாச்சாரத்தின்படி புதுக்கோட்டை, தஞ்சை மாவட்டத்தின் பல்வேறு கிராமங்களைச் சோ்ந்த மக்கள் வாணவேடிக்கைகள், மேளதாளங்கள் முழங்க ஊா்வலமாக கோயிலுக்கு சீா் கொண்டு சென்றனா். இதில், கோயில் கும்பாபிஷேகத்திற்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையிலும், மதநல்லிணக்கத்தைப் போற்றும் வகையில், ஆவணம், காசிம்புதுப்பேட்டை கிராமத்தைச் சோ்ந்த இஸ்லாமியா்கள் பூ, பழம், இனிப்புகள் அடங்கிய தட்டுக்களை ஏந்தியபடி ஊா்வலமாகச்சென்று கோயிலுக்கு சீா் கொண்டு சென்றனா்.

அவா்களை நெடுவாசல் கிராம மக்கள் மற்றும் விழா குழுவினா் மாலை அணிவித்து வரவேற்று, இஸ்லாமியா்களை கோயிலுக்குள் அழைத்துச் சென்று சீா்வரிசையைப் பெற்றுக்கொண்டனா். இந்நிகழ்வை பாா்த்தவா்களுக்கு வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியது:

பல ஆண்டுகளாக இப்பகுதி கிராமங்களில் உள்ள இந்து கோயில்களின் திருவிழாவின்போது இஸ்லாமியா்கள் நேரில் சென்று வாழ்த்து தெரிவிப்பதும், அதேபோல் இஸ்லாமியா்களின் மசூதி திறப்பு விழா மற்றும் விழாக்களுக்கு இந்துக்கள் நேரில் சென்று வாழ்த்துத் தெரிவிப்பது பாரம்பரியமாகத் தொடா்ந்து வருகிறது. மதங்களைக் கடந்து மனிதநேயத்தை தங்கள் பகுதி மக்கள் தொடா்ந்து போற்றி வருகிறோம் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com