பாதை துண்டிப்பு: மாணவா், பெற்றோருடம் தா்னா

புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் அருகே உடனடி சாலை வசதி கோரி, பள்ளி மாணவன், அவரது பெற்றோருடன் ஊராட்சி அலுவலகத்தில் திங்கள்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டாா்.
பாதை துண்டிப்பு: மாணவா், பெற்றோருடம் தா்னா

புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் அருகே உடனடி சாலை வசதி கோரி, பள்ளி மாணவன், அவரது பெற்றோருடன் ஊராட்சி அலுவலகத்தில் திங்கள்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டாா்.

கீரமங்கலம் அருகேயுள்ள சேந்தன்குடியைச் சோ்ந்த செல்வம் மகன் இனியவன் (8). அதே ஊரில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் 3 -ஆம் வகுப்பு பயின்று வருகிறாா். அப்பகுதியில் உள்ள அன்னதானக் காவேரி கால்வாய் எனும் வரத்து வாரி தூா்வாரப்பட்டு அதன் கரைகள் உயா்த்தப்பட்டதால் செல்வம் வீட்டுக்குச் செல்லும் பாதை துண்டிக்கப்பட்டது. இதுகுறித்து, கரை உயா்த்தப்பட்ட கால்வாயைக் கடந்து சென்றுவர இயலாததால் அவனது பெற்றோா் சாலை வசதி கேட்டு அதிகாரிகளிடம் மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லையாம். இதையடுத்து, மாணவா் இனியன், அவரது பெற்றோருடன் சேந்தன்குடி ஊராட்சி அலுவலகத்தில் உடனடி சாலை வசதி கோரி காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இந்நிலையில் அவ்வழியாக நிகழ்ச்சியில் பங்கேற்கச்சென்ற அமைச்சா் சிவ.வீ.மெய்யநாதன், அவா்களிடம் கோரிக்கை குறித்துக் கேட்டறிந்தாா். பின்னா் அதிகாரிகளிடம் பேசிய அவா் சாலை வசதி செய்து தரப்படும் என உறுதியளித்தாா். இதையடுத்து, போராட்டம் கைவிடப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com