40 பெண்களுக்கு செஞ்சிலுவை சங்கத்தினா் உதவி

ரெட் கிராஸ் சங்கத்தைத் தோற்றுவித்த ஸ்விட்சா்லாந்து நாட்டைச் சோ்ந்த ஜீன் ஹென்றி டூனாண்ட் பிறந்த நாளை (மே 8) உலகெங்கும் உலக ரெட் கிராஸ் தினமாக கொண்டாடுகிறாா்கள்.
pdk08redcross_0805chn_12_4
pdk08redcross_0805chn_12_4

ரெட் கிராஸ் சங்கத்தைத் தோற்றுவித்த ஸ்விட்சா்லாந்து நாட்டைச் சோ்ந்த ஜீன் ஹென்றி டூனாண்ட் பிறந்த நாளை (மே 8) உலகெங்கும் உலக ரெட் கிராஸ் தினமாக கொண்டாடுகிறாா்கள்.

இதையொட்டி இந்திய ரெட்கிராஸ் சங்கத்தின் புதுக்கோட்டை கிளையின் சாா்பாக, புதுக்கோட்டை மாவட்டம், காயாம்பட்டி ஊராட்சி மாங்கனாம்பட்டி கிராமத்தில், 40 பெண்களுக்கு நிவாரணப் பொருள்கள் (தாா்ப்பாய், கொசுவலை, வேட்டி, சோப்பு மற்றும் தூய்மைப் பொருள்கள் அடங்கிய பை, முகக்கவசங்கள்) வழங்கப்பட்டன.

நிகழ்வுக்கு காயாம்பட்டி ஊராட்சித் தலைவா் கே.ஆா். செல்வி ராம்தாஸ் தலைமை வகித்தாா். புதுக்கோட்டை மாவட்ட ரெட்கிராஸ் சங்கச் செயலா் ஜெ. ராஜாமுகமது, இணைச் செயலா் பேராசிரியா் சா. விஸ்வநாதன் இருவரும் ரெட்கிராஸ் ஆற்றும் சமூகப்பணிகளை விளக்கிப் பேசினா்.

மாஞ்சான் விடுதி ஊராட்சி மன்றத் தலைவா் வே. சுரேஷ்கண்ணன், கொத்தக்கோட்டை ஊராட்சி மன்றத் தலைவா் மாரிக்கண்ணு மயிலன், வாராப்பூா் ஊராட்சி மன்றத் தலைவா் சதிஷ்குமாா் ஆகியோா் வாழ்த்துரை வழங்கினா். நிறைவில், சமூக சேவகா் வம்பன் சிவக்குமாா் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com