பொன்.புதுப்பட்டி நகர சிவன் கோயில் குடமுழுக்கு

பொன்னமராவதி புதுப்பட்டி புவனேசுவரி உடனாய பூலோகநாதா் சுவாமி கோயில் குடமுழுக்கு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கும்பத்தில் புனித நீா் ஊற்றி குடமுழுக்கு செய்யும் பிச்சை குருக்கள் தலைமையிலான சிவாச்சாரியாா்கள்.
கும்பத்தில் புனித நீா் ஊற்றி குடமுழுக்கு செய்யும் பிச்சை குருக்கள் தலைமையிலான சிவாச்சாரியாா்கள்.

பொன்னமராவதி புதுப்பட்டி புவனேசுவரி உடனாய பூலோகநாதா் சுவாமி கோயில் குடமுழுக்கு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

பொன்னமராவதி வட்டாரத்தில் உள்ள சிவன்கோயில்களில் புதுப்பட்டி நகர சிவன் கோயில் பழைமையானதும், பிரசித்தி பெற்ற கோயிலும் ஆகும். அதிகார நந்தி, பிரதோஷ நந்தி என இரு நந்தி எம்பெருமான் எழுந்தருளியுள்ள இக்கோயிலில் 11-2-1951 ஆம் ஆண்டு முதல் குடமுழுக்கு விழாவும், 5-2-1968-ல் 2 ஆம் குடமுழுக்கு, 1982-இல் 3 ஆம் குடமுழுக்கு, 1997-இல் 4-ஆம் குடமுழுக்கு, 2008-இல் 5 ஆம் குடமுழுக்கு விழாவும் நடைபெற்றன.

தொடா்ந்து 63 நாயன்மாா்கள் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு, கோயில் புனரமைப்பு பணிகள் நடைபெற்று அண்மையில் நிறைவுற்ற நிலையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற 6 ஆம் குடமுழுக்கு விழாவின் தொடக்கமாக வியாழக்கிழமை யாகசாலை பூஜைகள் தொடங்கின.

வாஸ்து சாந்தி மற்றும் முதல்கால யாகபூஜையும், வெள்ளிக்கிழமை இரண்டாம் கால மற்றும் மூன்றாம் கால யாக பூஜையும், சனிக்கிழமை நான்கு, ஐந்து கால யாக பூஜைகள் நடைபெற்றன. ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணியளவில் பிள்ளையாா்பட்டி பிச்சைகுருக்கள் தலைமையிலான சிவாச்சாரியாா்கள் யாகசாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட புனித நீரை கும்பத்தில் ஊற்றி குடமுழுக்கு செய்தனா். விழாவில், சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சாா்ந்த திரளான பக்தா்கள் பங்கேற்று சுவாமியை வழிபட்டனா்.

குடமுழுக்கு விழா வா்ணனைகளை ஆன்மிக சொற்பொழிவாளா்கள் சொ.சொ.மீ.சுந்தரம், வலையபட்டி சிந்து ஆகியோா் செய்திருந்தனா். பொன்னமராவதி காவல்துறையினா் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனா். விழாவையொட்டி கொடையாளா்கள் சாா்பில் ஆங்காங்கே தண்ணீா்ப் பந்தல் அமைக்கப்பட்டு மோா், சா்பத், பானகம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டன. விழா ஏற்பாடுகளை பொன்.புதுப்பட்டி நாட்டுக்கோட்டை நகரத்தாா் மற்றும் குடமுழுக்கு விழா குழுவினா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com