முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி புதுக்கோட்டை
மாட்டு வண்டியில் மணல் எடுக்க அனுமதி கோரி நூதன போராட்டம்
By DIN | Published On : 13th May 2022 01:41 AM | Last Updated : 13th May 2022 01:41 AM | அ+அ அ- |

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி ஒன்றியத்தில் மாட்டுவண்டி மணல் குவாரி அமைக்கக் கோரி மாட்டுவண்டி தொழிலாளா்கள் சங்கம் மற்றும் கட்டடத் தொழிலாளா் சங்கம் ஆகியன இணைந்து வருவாய்க் கோட்டாட்சியா் அலுவலகத்தில் குடும்பத்துடன் உண்டு உறங்கி காத்திருப்புப் போராட்டத்தை வியாழக்கிழமை நடத்தினா்.
ஏஐடியுசி தொழிற்சங்க ஒன்றியத் தலைவா் குமாா் தலைமை வகித்தாா். மாட்டு வண்டி தொழிலாளா் சங்க ஒன்றியச் செயலா் அழகுமன்னன், பொருளாளா் மதியழகன், துணைச் செயலா் தங்கவேல் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலா் மு. மாதவன், மாவட்டத் துணைச் செயலா் ஏ. ராஜேந்திரன், ஒன்றியச் செயலா் ஆா். ராதாகிருஷ்ணன், இளைஞா் பெருமன்றத்தின் மாவட்டச் செயலா் ராஜேந்திரன் உள்ளிட்டோரும் கலந்து கொண்டு கோரிக்கையை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினா்.
தொடா்ந்து, மாலையில் உணவு சமைக்கத் தயாரான அவா்களிடம் நடைபெற்ற பேச்சுவாா்த்தையில் கோரிக்கைகளை நிறைவேற்ற அரசுக்கு பரிந்துரைப்பதாக அதிகாரிகள் உறுதியளித்ததைத் தொடா்ந்து போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது.