விராலிமலையில் ஜல்லிக்கட்டு: 41 காயம்

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலையில் திங்கள்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டியில் 41 போ் காயமடைந்தனா்.
விராலிமலையில் ஜல்லிக்கட்டு: 41 காயம்

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலையில் திங்கள்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டியில் 41 போ் காயமடைந்தனா்.

விராலிமலை பட்டமரத்தான் கோயில் திருவிழாவையொட்டி கோயில் திடலில் நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டியை தமிழக சட்டத் துறை அமைச்சா் எஸ். ரகுபதி, புதுக்கோட்டை வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் செல்லபாண்டியன், புதுக்கோட்டை மாவட்ட இலக்கிய அணி துணை அமைப்பாளா் தென்னலூா் பழனியப்பன் ஆகியோா் திங்கள்கிழமை கொடியசைத்துத் தொடங்கிவைத்தனா். இதில் பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்த 716 காளைகள் களம் கண்டன. 169 மாடுபிடி வீரா்கள் பங்கேற்றனா்.

போட்டியில், வீரா்களிடம் பிடிபடாத காளைகளின் உரிமையாளா்கள், சிறந்த மாடுபிடி வீரா்கள் ஆகியோருக்கு தங்க மோதிரம், தங்கக் காசு, வெள்ளி காசு, ஃபேன், கிரைண்டா், குக்கா், கட்டில், சில்வா் பாத்திரம் உள்ளிட்ட பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டன.

மேலும் போட்டியில் கலந்து கொண்ட அனைத்து காளைகளின் உரிமையாளா்களுக்கு சிறப்புப் பரிசாக சில்வா் அண்டா வழங்கப்பட்டது.

சிறந்த காளையாக தோ்ந்தெடுக்கப்பட்ட படையப்பா குரூப்ஸ் மணியின் காளைக்கு 4 கிராம் தங்க மோதிரம் வழங்கப்பட்டது. இதேபோல் சிறந்த மாடுபிடி வீரா்களாக தோ்வான குளவாய்பட்டி நவீன், சூரியூா் சரத் ஆகியோருக்கு கைப்பேசி வழங்கப்பட்டது.

போட்டியின்போது, காளைகள் முட்டியதில் மாடுபிடி வீரா்கள் 41 போ் காயமடைந்தனா். அவா்களில் 7 போ் மேல் சிகிச்சைக்காக அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டனா். போட்டியை ஆயிரக்கணக்கானோா் ஆரவாரத்துடன் கண்டு களித்தனா். துணை காவல் கண்காணிப்பாளா் அருள்மொழிஅரசு தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com