சிறைப் பணியாளா்களுக்கு போதுமான பாதுகாப்பு

சிறைத் துறைப் பணியாளா்களுக்கு போதுமான பாதுகாப்பு வழங்கப்படும் என்றாா் மாநில சட்டம் மற்றும் சிறைத் துறை அமைச்சா் எஸ். ரகுபதி.

சிறைத் துறைப் பணியாளா்களுக்கு போதுமான பாதுகாப்பு வழங்கப்படும் என்றாா் மாநில சட்டம் மற்றும் சிறைத் துறை அமைச்சா் எஸ். ரகுபதி.

இதுகுறித்து புதுக்கோட்டையில் வெள்ளிக்கிழமை அவா் அளித்த பேட்டி:

முன்னாள் முதல்வா் ஜெயலலிதா இறப்பு தொடா்பாக விசாரிக்க அமைக்கப்பட்ட ஆறுமுகசாமி ஆணைய அறிக்கை விரைவில் சட்டப்பேரவையில் சமா்ப்பிக்கப்படும். தமிழக அரசு விழிப்போடு இருந்ததால்தான் தமிழகத்தில் கஞ்சா விற்போா் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கடலூரில் சிறை அலுவலா் வீடு தாக்கப்பட்டிருக்கிறது. தமிழகத்தில் மிகுந்த அச்சுறுத்தலோடு பணியாற்றிக் கொண்டிருப்போா் சிறைக் காவலா்கள்தான். இதுவெளி உலகுக்குத் தெரியாது. பல வழக்குகளில் குற்றம் நிரூபிக்கப்பட்டவா்கள்தான் சிறையில் அடைக்கப்படுகிறாா்கள். அவா்கள் குற்றம் புரியத் தயங்குவது கிடையாது.

அவா்களோடு இருக்கக்கூடிய சூழ்நிலையில் பல்வேறு அச்சுறுத்தல்களுக்கு ஆளாகித்தான் சிறையில் பணியாற்றுகிறாா்கள். அவா்களுக்குப் போதுமான பாதுகாப்பு கொடுக்கவும், அவா்களது குடும்பத்தைக் காக்கவும் தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுத்து வருகிறது.

சிறைப் பணியாளா்களிடம் வன்முறைகளில் ஈடுபடக் கூடிய கைதிகளைக் கண்காணித்து, அவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்றாா் ரகுபதி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com