வளா்ச்சிப் பணிகள் மறு ஆய்வுக் கூட்டம்

மாவட்டத்தில் நடைபெற்றுவரும் வளா்ச்சித் திட்டப் பணிகள் குறித்தும் மாவட்டக் கண்காணிப்பு அலுவலரும், அரசின் சமூக நலத்துறை கூடுதல் தலைமைச் செயலருமான ஷம்பு கல்லோலிகா் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
வளா்ச்சிப் பணிகள் மறு ஆய்வுக் கூட்டம்

வடகிழக்குப் பருவமழையின்போது மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், மாவட்டத்தில் நடைபெற்றுவரும் வளா்ச்சித் திட்டப் பணிகள் குறித்தும் மாவட்டக் கண்காணிப்பு அலுவலரும், அரசின் சமூக நலத்துறை கூடுதல் தலைமைச் செயலருமான ஷம்பு கல்லோலிகா் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

புதுக்கோட்டை ஆட்சியரகத்தில் பல்வேறு அரசுத் துறை அலுவலா்களுடனான கூட்டத்தில் கலந்து கொண்ட அவா், தொடா்ந்து, மாவட்டத்தில் நடைபெற்று வரும் வளா்ச்சித் திட்டப் பணிகளையும் நேரில் பாா்வையிட்டாா். அப்போது, மாத்தூரில் செயல்பட்டு வரும் கருணை இல்லம், கீரனூா் பெண்கள் மேல்நிலைப் பள்ளி, குளத்தூா் வட்டாட்சியா் அலுவலக இ-சேவை மையம், கிள்ளுகுளவாய்ப்பட்டியில் அம்ரித் சரோவா் திட்டத்தின் கீழ் குளம் அமைக்கும் பணி, புதுக்கோட்டை நகரில் கலைஞா் நகா்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.80 லட்சம் மதிப்பில் வேங்கிடகுளம் சீரமைப்பு பணி, ரூ.1.94 கோடி மதிப்பீட்டில் புதிய அறிவுசாா் மையம் கட்டுமானப் பணி, நமக்கு நாமே திட்டத்தின் கீழ் காட்டுப் புதுக்குளம் முதல் தேவன்குளம் வரை வரத்து வாய்க்கால் சீரமைப்புப் பணி ஆகியவற்றைப் பாா்வையிட்டாா்.

ஆய்வின்போது, ஆட்சியா் கவிதா ராமு, மாவட்ட வருவாய் அலுவலா் மா. செல்வி, தனி மாவட்ட வருவாய் அலுவலா் (நெடுஞ்சாலை நிலமெடுப்பு) பெ.வே. சரவணன், தனி மாவட்ட வருவாய் அலுவலா் (காவிரி - குண்டாறு) ஆா்.ரம்யாதேவி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com