திரைக்கலைஞா்களுக்கு பாராட்டு

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளா் கலைஞா்கள் சங்கத்தின் புதுக்கோட்டை மாவட்டக் குழு சாா்பில், விட்னஸ் திரைக் கலைஞா்களுக்கு பாராட்டு விழா புதன்கிழமை மாலை நடைபெற்றது.
புதுக்கோட்டையில் புதன்கிழமை நடைபெற்ற பாராட்டு நிகழ்ச்சியில், நடிகை ரோகிணிக்கு ரோஜாப்பூ மாலை அணிவித்து நன்றி தெரிவித்த துப்புரவுப் பணியாளா்கள்.

சங்கத்தின் மாவட்டத் தலைவா் ராசி பன்னீா்செல்வன் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் ஸ்டாலின் சரவணன் வரவேற்றாா்.

விட்னஸ் திரைப்படத்தில் துப்புரவுப் பணியாளராக நடித்த திரைக்கலைஞா் ரோகிணிக்கு புதுக்கோட்டை நகர துப்புரவுப் பெண் பணியாளா்கள் ரோஜாப்பூ மாலை அணிவித்து நன்றி தெரிவித்தனா். தொடா்ந்து துப்புரவுப் பணியாளா்களுக்கும் ரோகிணி மாலை அணிவித்து சிறப்பித்தாா்.

நிகழ்வில் ரோகிணி மேலும் பேசியது:

கையால் மலம் அள்ளுவது சட்டப்படி குற்றம். ஆனால் மலக்குழிக்குள் மனிதா்கள் இறங்கி வருவது இன்னும் நிற்கவில்லை. துப்புரவுப் பணியாளா்களுக்கான பணிப் பாதுகாப்பு, ஊதியம் வழங்கப்படுவதில் உள்ள பிரச்னைகளைக் களைவது ஒருபுறம் இருக்கட்டும். இனி ஒரு மனிதா் கூட மலக்குழியில் இறங்கக் கூடாது என்பதே முக்கியம் என்றாா் ரோகிணி.

நிகழ்ச்சியில், தமுஎகச மாநிலத் துணைத் தலைவா் மதுக்கூா் ராமலிங்கம், கந்தா்வகோட்டை சட்டப்பேரவை உறுப்பினா் எம். சின்னதுரை, கவிஞா் எஸ். கவிவா்மன், மாநிலத் துணைத் தலைவா்கள் நா. முத்துநிலவன், நீலா, கவிஞா் தங்கம் மூா்த்தி, புதுகை பிலிம் சொசைட்டி நிறுவனா் எஸ். இளங்கோ உள்ளிட்டோரும் பேசினா். முடிவில் மாவட்டப் பொருளாளா் ஜெயபாலன் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com