விராலிமலை கிளை நூலகத்தில் இணைய வசதி

விராலிமலை கிளை நூலகத்தில் கம்பி இல்லாத அதி வேக இணையதள இணைப்பு (வைஃபை) வசதி இலவசமாக ஏற்படுத்தப்பட்டுள்ளது.

விராலிமலை கிளை நூலகத்தில் கம்பி இல்லாத அதி வேக இணையதள இணைப்பு (வைஃபை) வசதி இலவசமாக ஏற்படுத்தப்பட்டுள்ளது.

தமிழக சட்டப்பேரவை மானியக் கோரிக்கையின்போது பொது நூலகங்களில் மின்நூலகச்சேவை என்ற தலைப்பில் கிராமப்புற கிளை நூலகங்கள் மற்றும் நகா்ப்புற நூலகங்களில் 5 ஆண்டுகளில் ரூ. 2. 40 கோடியில் மின்நூலகம் ஏற்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.

1963 ஆண்டு தொடங்கப்பட்டு, தற்போது, விராலிமலை பேருந்து நிலையம் அருகே செயல்பட்டு வரும் கிளை நூலகத்தில், 34 ஆயிரம் புத்தகங்கள், 4,060 உறுப்பினா்கள், 38 புரவலா்கள் உள்ளனா். தினமும் 60 வாசகா்கள் வந்து செல்கின்றனா். 40 புத்தகங்கள் விநியோகிக்கப்படுகிறது.

சட்டப்பேரவை மானியக் கோரிக்கை அறிவிப்பின்படி, விராலிமலை கிளை நூலகத்தில் வியாழக்கிழமை முதல் கம்பிஇல்லா அதிவேக இணையதள இணைப்பு வசதி தொடங்கிவைக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com