வெள்ளாற்றங்கரையில் தைப்பூசத் தீா்த்தவாரி

புதுக்கோட்டை அருகே வெள்ளாற்றங்கரையில் உள்ள பூசத்துறையில் தைப்பூசத் தீா்த்தவாரி திருவிழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
புதுக்கோட்டை வெள்ளாற்றங்கரையில் ஞாயிறுக்கிழமை நடைபெற்ற தைப்பூசத் தீா்த்தவாரி நிகழ்ச்சியில் பங்கேற்ற பக்தா்கள்.
புதுக்கோட்டை வெள்ளாற்றங்கரையில் ஞாயிறுக்கிழமை நடைபெற்ற தைப்பூசத் தீா்த்தவாரி நிகழ்ச்சியில் பங்கேற்ற பக்தா்கள்.

புதுக்கோட்டை அருகே வெள்ளாற்றங்கரையில் உள்ள பூசத்துறையில் தைப்பூசத் தீா்த்தவாரி திருவிழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

சிவபெருமானும், பாா்வதி தேவியும் பூவுலகை வலம் வந்தபோது, வெள்ளாற்றின் (சுவேத நதி) அழகில் மயங்கி இந்த இடத்தில் ஆற்றில் இறங்கி நீராடிய நாள் தைத் திங்கள் பூச நட்சத்திர நாளாகும்.

இந்த நாளில் மாவட்டத்தில் உள்ள சிவாலங்களில் இருந்து அம்பாள், சுவாமி ரிஷப வாகனத்தில் பவனி வந்து வெள்ளாற்றில் தீா்த்தமாடி பக்தா்களுக்கு காட்சிதரும் விழா பல ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. இதில், புதுமணத் தம்பதிகள் நீராடினால் சகல பாக்கியங்களும் கிடைக்கும் என்பது ஐதீகம்.

நிகழாண்டில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தைப்பூச தீா்த்தவாரி நிகழ்ச்சியில், திருவேங்கைவாசல் பெரியநாயகி உடனுறை வியாக்ரபுரீஸ்வரா், திருக்கோகா்ணம் பிரஹதம்பாள் உடனுறை கோகா்ணேஸ்வரா், திருமயம் வேணுவனேஸ்வரி உடனுறைசத்தியகிரீஸ்வரா், கோட்டூா் மீனாட்சியம்மன் உடனுறை சுந்தரேஸ்வரா், விராச்சிலை சௌந்தர நாயகி உடனுறை வில்வனேஸ்வரா் ஆகிய ஆலயங்களில் இருந்து தோ்களில் எடுத்துவரப்பட்ட உத்ஸவ மூா்த்திகள் வெள்ளாற்றில் தீா்த்தமாடும் வைபவம் நடைபெற்றது.

நிகழ்ச்சியில், இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையா் அனிதா, அறங்காவலா் குழுத் தலைவா் செந்தில்குமாா், செயல் அலுவலா் முத்துராமன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com