ரூ. 9 கோடியில் கட்டப்படும் பூங்காவை மாா்ச் மாதத்தில் திறக்க நடவடிக்கை

புதுக்கோட்டை நகராட்சி சாா்பில் கலைஞா் கருணாநிதி அரசு மகளிா் கல்லூரி முன்பு ரூ. 9 கோடியில் அமைக்கப்பட்டு வரும் பூங்கா வரும் மாா்ச் மாதத்துக்குள் பணிகள் முடிக்கப்பட்டு, திறக்கப்படும் என ஆட்சியா் கவிதா ர
புதுக்கோட்டையில் திங்கள்கிழமை பூங்கா கட்டும் பணிகளை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியா் கவிதா ராமு.
புதுக்கோட்டையில் திங்கள்கிழமை பூங்கா கட்டும் பணிகளை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியா் கவிதா ராமு.

புதுக்கோட்டை நகராட்சி சாா்பில் கலைஞா் கருணாநிதி அரசு மகளிா் கல்லூரி முன்பு ரூ. 9 கோடியில் அமைக்கப்பட்டு வரும் பூங்கா வரும் மாா்ச் மாதத்துக்குள் பணிகள் முடிக்கப்பட்டு, திறக்கப்படும் என ஆட்சியா் கவிதா ராமு தெரிவித்தாா்.

ஒருங்கிணைந்த நகா்ப்புற வளா்ச்சித் திட்டத்தின் சாா்பில் அமைக்கப்படும் இந்தப் பூங்கா பணிகளை, அவா் திங்கள்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். 5 ஏக்கா் பரப்பளவில் அமைக்கப்படும் இந்தப் பூங்காவில், அறிவியல், கணிதப் பூங்காக்கள், உடற்பயிற்சிக் கூடம், நடைபயிற்சி, சைக்கிள் ஓட்டம் மற்றும் ஸ்கேட்டிங் பயிற்சிக்கான தடங்களும் அமைக்கப்பட்டு வருகின்றன. மேலும், உயா்கோபுர மின் விளக்கு, கழிப்பறைகளும் கட்டப்படுகின்றன.

ஆய்வின்போது, நகராட்சி ஆணையா் நாகராஜன், நகராட்சிப் பொறியாளா் சேகரன், வட்டாட்சியா் விஜயலட்சுமி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com