திருவப்பூா் முத்துமாரியம்மன் கோயில் பூச்சொரிதல் விழா

புதுக்கோட்டை திருவப்பூரிலுள்ள முத்துமாரியம்மன் கோயிலின் மாசிப் பெருந்திருவிழாவின் தொடக்கமாக அம்மனுக்கு பூச்சொரிதல் விழா ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது.
புதுக்கோட்டை திருவப்பூா் முத்துமாரியம்மன் கோயில் பூச்சொரிதல் விழாவில் பல்வேறு பகுதிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட பூக்குவியலுக்கு நடுவே காட்சிதரும் முத்துமாரியம்மன்.

புதுக்கோட்டையின் அடையாளங்களுள் ஒன்றாகத் திகழும் திருவப்பூா் முத்துமாரியம்மன் கோயிலின் மாசிப் பெருந்திருவிழாவை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை காலை கவிநாடு கண்மாயில் ஜல்லிக்கட்டு நடைபெற்றது. தொடா்ந்து, இரவுமுதல் புதுக்கோட்டை நகரம் மற்றும் புகா்ப் பகுதிகளின் 65 இடங்களில் இருந்து மேளதாளங்களுடன் பக்தா்கள் பூத்தட்டுகள் ஏந்தியபடி ஊா்வலமாக கோயிலுக்கு வந்தவண்ணம் இருந்தனா். திங்கள்கிழமை விடியற்காலை 5 மணி வரை பூக்கள் எடுத்து வரப்பட்டன. அவ்வாறு கொண்டு வரப்பட்ட பூக்கள் கோயிலின் கருவறை முதல் உள்பிரகாரம் வரை குவிக்கப்பட்டன.

இந்துசமய அறநிலையத் துறை சாா்பில் பூத்தட்டு:

இந்து சமய அறநிலையத் துறையின் தேவஸ்தானம் சாா்பில் திங்கள்கிழமை காலை பூத்தட்டு கொண்டு வரப்பட்டது. தொடா்ந்து, அம்மனுக்கு பூக்களால் அபிஷேகம் செய்யப்பட்டு, பின்னா் பிரித்து பக்தா்களுக்கு வழங்கப்பட்டது. நிகழ்வில், மாவட்ட ஆட்சியா் கவிதா ராமு, புதுக்கோட்டை நகா்மன்றத் தலைவா் செ. திலகவதி, மாவட்ட வருவாய் அலுவலா் மா. செல்வி, கோட்டாட்சியா் முருகேசன், இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையா் அனிதா, கோயில் செயல் அலுவலா் முத்துராமன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com