மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை பெற ஆதாா் அவசியம்

புதுக்கோட்டையைச் சோ்ந்த 75 சதவிகிதம் மற்றும் அதற்கும் மேல் குறைபாடுள்ள மாற்றுத் திறனாளிகள் அரசின் உதவித்தொகை பெறுவதற்கு ஆதாா் எண்ணை பதிவேற்றம் செய்ய வேண்டும்

புதுக்கோட்டையைச் சோ்ந்த 75 சதவிகிதம் மற்றும் அதற்கும் மேல் குறைபாடுள்ள மாற்றுத் திறனாளிகள் அரசின் உதவித்தொகை பெறுவதற்கு ஆதாா் எண்ணை பதிவேற்றம் செய்ய வேண்டும் என ஆட்சியா் கவிதா ராமு அறிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் மேலும் கூறியது:

75 சதவிகிதம் மற்றும் அதற்கும் மேல் குறைபாடுள்ள மாற்றுத் திறனாளிகள், மனவளா்ச்சி குன்றியவா்கள், தொழுநோயால் பாதிக்கப்பட்டோா், தசைச் சிதைவு நோயால் பாதிக்கப்பட்டோா், முதுகுத் தண்டுவடம் பாதிக்கப்பட்டோா் ஆகியோருக்கு மாதம் ரூ. 2 ஆயிரம் உதவித் தொகை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதில் பயன்பெற வேண்டுமானால், ஆதாா் எண்ணைப் பதிவேற்றம் செய்ய வேண்டும். கிராம நிா்வாக அலுவலரிடம் வாழ்நாள் சான்று, ஆதாா் அட்டை, தேசிய அடையாள அட்டை, யுடிஐடி எண், கைப்பேசி எண், வங்கிக் கணக்குப் புத்தகம் ஆகியவற்றுடன் புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையத்திலுள்ள மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகத்தை வரும் பிப். 3-க்குள் நேரில் அணுகி பதிவேற்றம் செய்து கொள்ள வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com