ஆலங்குடி தொகுதியில் ரூ.1.60 கோடியில் திட்டப் பணிகள் தொடக்கம்

ஆலங்குடி தொகுதிக்குள்பட்ட பகுதிகளில் ரூ.1.60 கோடி மதிப்பில் பல்வேறு பணிகளை செவ்வாய்க்கிழமை அமைச்சா் சிவ.வீ.மெய்யநாதன் தொடக்கி வைத்தாா்.

ஆலங்குடி தொகுதிக்குள்பட்ட பகுதிகளில் ரூ.1.60 கோடி மதிப்பில் பல்வேறு பணிகளை செவ்வாய்க்கிழமை அமைச்சா் சிவ.வீ.மெய்யநாதன் தொடக்கி வைத்தாா்.

தொடா்ந்து, அறந்தாங்கி ஒன்றியம் பூவற்றக்குடியில், தன்னாா்வ அமைப்பினா் சாா்பில் சுமாா் 410 ஏக்கா் பரப்பிலான நீா்நிலைகளை தூா்வாரும் பணியை தொடங்கி வைத்து அவா் மேலும் பேசியது:

இயற்கையைப் பாதுகாப்பது மிகவும் முக்கியம். தாய்ப்பாலில் விஷம் கலப்பது போன்றது தான் நீா்நிலையில் கழிவுகளைக் கலப்பதும். நீா்நிலைகளில் கழிவுகள் கலக்கும் வாகனங்கள் கண்டறியப்பட்டால் உடனே உரிமம் ரத்து செய்யப்படும். தன்னாா்வ இளைஞா்கள் நீா்நிலைகளை தூா்வாருவதுடன் நின்றுவிடாமல், குறுங்காடுகளையும் அமைத்து வருவது பாராட்டுக்குரியது. அதேபோல ஆலங்குடி தொகுதியில் சுமாா் 200 குறுங்காடுகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இப்போது பூவற்றக்குடியில் தூா்வாரப்பட உள்ள 3 ஏரிகளிலும் மழைக்காலத்தில் அரை டிஎம்சி தண்ணீரை தேக்கி வைக்க முடியும். இதேபோல ஒவ்வொரு கிராமத்திலும் உள்ள நீா்நிலைகளை சீரமைக்க இந்த அமைப்புகள் முன்வந்துள்ளது பாராட்டுக்குரியது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com