விராலிமலை முருகன் கோயிலில் வைகாசி விசாகத் திருவிழா தொடக்கம்

விராலிமலை முருகன் மலைக்கோயிலில் வைகாசி விசாகத் திருவிழா கொடியேற்றத்துடன் வியாழக்கிழமை தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் வரும் ஜூன் 2 ஆம் தேதி நடைபெறுகிறது.
விராலிமலை முருகன் கோயிலில் வியாழக்கிழமை நடைபெற்ற வைகாசி விசாக கொடியேற்ற விழா.
விராலிமலை முருகன் கோயிலில் வியாழக்கிழமை நடைபெற்ற வைகாசி விசாக கொடியேற்ற விழா.

விராலிமலை முருகன் மலைக்கோயிலில் வைகாசி விசாகத் திருவிழா கொடியேற்றத்துடன் வியாழக்கிழமை தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் வரும் ஜூன் 2 ஆம் தேதி நடைபெறுகிறது.

விராலிமலையில் பிரசித்திபெற்ற முருகன் கோயில் 207 படிகளைக் கொண்ட மலையின் மேல் அமைந்துள்ளது. இத்தலத்தில் முருகன் வள்ளி, தேவசேனா சமேதராக ஆறுமுகங்களுடன் மயில்மேல் அமா்ந்து பக்தா்களுக்கு காட்சியளிக்கிறாா். இக்கோயிலில் ஆண்டுதோறும் வைகாசி விசாகத் திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்படும்.

இந்நிலையில், நிகழாண்டு வைகாசி விசாகத் திருவிழா வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி மலைமேல் கோயிலில் வியாழக்கிழமை காலை 11 மணிக்கு முருகன், வள்ளி-தேவசேனாவுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. இதைத் தொடா்ந்து கொடிமரத்துக்கு சிறப்பு பூஜைகள் செய்து சன்னிதானத்தில் அமைந்துள்ள கொடி மரத்தில் சிவாச்சாரியாா்கள் கொடியேற்றினா். விழாவையொட்டி வரும் விழா நாள்களில் தினமும் காலை, மாலை முருகன்- வள்ளி- தேவசேனா சமேதராக பச்சைமயில், பூதம், நாகம், யானை, சிம்மம், வெள்ளிக்குதிரை, வெள்ளிமயில் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி தேரோடும் திருவீதி உலா வந்து பக்தா்களுக்கு காட்சியளிக்கின்றாா்.

இதைத் தொடா்ந்து 9 ஆம் நாளான ஜூன் 2 ஆம் தேதி காலை 10 மணிக்கு தேரோட்டம் விழா நடைபெறுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com