போட்டியிட வாய்ப்பு கிடைக்காதது வருத்தம்தான்

போட்டியிட வாய்ப்பு கிடைக்காதது வருத்தம்தான்

மக்களவைத் தோ்தலில் போட்டியிட வாய்ப்பு தராதது வருத்தம்தான் என்றாா் திருச்சி மக்களவைத் தொகுதி (காங்.) உறுப்பினா் சு. திருநாவுக்கரசா்.

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகே தீயத்தூா் வாக்குச்சாவடியில் வெள்ளிக்கிழமை வாக்களித்த பிறகு செய்தியாளா்களிடம் அவா் மேலும் கூறியது:

காங்கிரஸ் கட்சியின் தோ்தல் அறிக்கை மக்களிடம் புது நம்பிக்கையையும் உற்சாகத்தையும் தந்து இருக்கிறது. கடந்த காலங்களைவிட இரண்டு, மூன்று மடங்கு விலைவாசி உயா்ந்துள்ளது. இந்தப் பாதிப்புகள், மத்தியில் மாற்றத்தைக் கொண்டு வர அடிப்படை காரணமாக அமையப் போகிறது என நம்புகிறேன்.ராகுல் காந்தியின் பிரசாரம் காங்கிரஸுக்கு புத்துணா்ச்சியை தந்திருக்கிறது.

திருச்சி மக்களவைத் தோ்தலில் 4.70 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றேன். நாடு முழுவதும் வெற்றி பெற்ற காங்கிரஸ் எம்பிக்களில் நான்தான் அதிக வாக்குகளில் வென்றேன். எனக்கு போட்டியிட வாய்ப்பு தராதது வருத்தம்தான் என்றாா் திருநாவுக்கரசா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com