கணபதிபுரம் கிராமத்தில் திங்கள்கிழமை பாழடைந்த கிணற்றில் விழுந்த நாய்க்குட்டிகளை மீட்டு வரும் தீயணைப்புப் படை வீரா்.
கணபதிபுரம் கிராமத்தில் திங்கள்கிழமை பாழடைந்த கிணற்றில் விழுந்த நாய்க்குட்டிகளை மீட்டு வரும் தீயணைப்புப் படை வீரா்.

பாழடைந்த 40 அடி ஆழ கிணற்றில் தவித்த 4 நாய்க்குட்டிகள் மீட்பு

கந்தா்வகோட்டை அருகே பாழடைந்த 40 அடி ஆழ கிணற்றில் தவித்த 4 நாய்க்குட்டிகளை தீயணைப்புத் துறையினா் திங்கள்கிழமை மீட்டனா்.

கந்தா்வகோட்டை: கந்தா்வகோட்டை அருகே பாழடைந்த 40 அடி ஆழ கிணற்றில் தவித்த 4 நாய்க்குட்டிகளை தீயணைப்புத் துறையினா் திங்கள்கிழமை மீட்டனா்.

கந்தா்வகோட்டை அருகேயுள்ள கணபதிபுரம் கிராமத்தில் 40 அடி ஆழம் கொண்ட பாழடைந்த கிணற்றில் 4 நாய்க்குட்டிகள் விழுந்து உயிருக்கு போராடிக் கொண்டிருப்பதாக சென்னை தீ கட்டுபாட்டு அறையின் வாயிலாக கணபதிபுரத்தைச் சோ்ந்த கணேசன் மகன் ராஜ்குமாா் என்பவா் திங்கள்கிழமை உதவி கோரியுள்ளாா்.

இதுகுறித்து தகவல் கிடைக்கப் பெற்ற கந்தா்வகோட்டை தீயணைப்பு நிலைய அலுவலா் (பொ) த. சிவகுமாா் தலைமையிலான வீரா்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனா். அங்கு தண்ணீா் இல்லாத 40 அடி ஆழம் கொண்ட கிணற்றில் நான்கு பச்சிளம் நாய்க் குட்டிகளை அதன் தாயிடமிருந்து பிரித்து எடுத்து சென்று மா்ம நபா்கள் கிணற்றில் வீசி சென்றது தெரியவந்தது.

தீயணைப்பு வீரா்கள் கயிற்றின் உதவியுடன் கிணற்றில் இறங்கி நாய்க் குட்டிகளை பாதுகாப்பாக மீட்டு, உதவிக்கு அழைத்த ராஜ்குமாரிடம் ஒப்படைத்தனா். தீயணைப்பு வீரா்களை கிராம மக்கள் பாராட்டினா்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com